பாரதிக்கும் கண்ணம்மாவுக்கும் திருமணம்.! திருமண வைபோகம் பார்க்க ரெடியா இருக்கீங்களா நண்பர்களே?

வெளியிட்டது

பாரதிகண்ணம்மா சீரியல் தற்போது விறுவிறுப்பான கட்டத்தையும், இறுதி கட்டத்தையும் எட்டி வருகிறது. அந்த வகையில் இன்று வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் பாரதிக்கும் கண்ணம்மாவுக்கும் இரண்டாவது முறையாக திருமணம் நடைபெற உள்ளது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா தொடருக்கு என்று தனி ரசிகர் பட்டாளமே இருந்து வருகிறது. மலையாளத்தில் ஒளிபரப்பான “கருத்த முத்து” என்கிற தொடரை அடிப்படையாகக் கொண்டு இந்த நாடகம் எடுக்கப்பட்டு வருகிறது. ஆரம்பத்தில் வேறு மாதிரியான கதைக் களத்துடன் தொடங்கிய இந்த தொடர் தற்போது எங்கெங்கோ சென்று விட்டது. இயக்குனர் கதையை வேறு பாதைக்கு திருப்பி இருக்கிறார். பலரும் இந்த நாடகத்தை முடித்து விடுமாறு இயக்குனருக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர்.! பாரதி தனக்கு குழந்தை பிறக்காது என்று நம்பிக் கொண்டிருக்கும் நிலையில் அவருக்கு இரட்டைக் குழந்தைகள் பிறக்கின்றது. இங்கு இருந்து பிரச்சனைகள் ஆரம்பமானது. ப்ரோமோ வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.!

பாரதிக்கும் கண்ணம்மாவுக்கும் திருமணம்.! திருமண வைபோகம் பார்க்க ரெடியா இருக்கீங்களா நண்பர்களே? 1
இந்த இரண்டு குழந்தைகளும் தன்னுடைய குழந்தைகளே இல்லை என்று பாரதி கண்ணம்மாவை சந்தேகப்பட்டு வீட்டை விட்டு வெளியே அனுப்பி விடுகிறார். கண்ணம்மாவும் கஷ்டப்பட்டு குழந்தைகளை வளர்த்து வருகிறார். ஒரு கட்டத்தில் டிஎன்ஏ டெஸ்ட் எடுத்து பார்க்கும் பாரதிக்கு இந்த உண்மைகள் அனைத்தும் தெரிய வருகிறது. பின்னர் கண்ணம்மாவிடம் அழுது புரண்டு மன்னிப்பு கேட்டு குழந்தைகளுடன் ஒன்றாக வாழலாம் என்று கதறி அழுகிறார். ஆனால் கண்ணம்மாவோ இத்தனை நாள் என்னை சந்தேகப்பட்ட உன்னுடன் வாழ விருப்பம் இல்லை என்று சொல்லி, தனது சொந்த கிராமத்திற்கு புதுக்கோட்டையில் சென்று வசித்து வருகிறார். அங்கு வரும் பாரதி கண்ணம்மா மனதை மாற்றுவதற்காக பல முயற்சிகளில் ஈடுபடுகிறார். ஒரு கட்டத்தில் அந்த ஊரில் இருக்கும் வில்லன் கண்ணம்மாவின் நடத்தையை கேள்விக்குறியாக்க சில சதித்திட்டங்களை தீட்டுகிறான். அந்த முயற்சியில் வில்லன் தோற்றுப் போகிறான்.


இதனால் பாரதியை பழிவாங்க வேண்டும் என்ற நோக்கில் அவரது தலையில் பெரிய இரும்பு ராடை கொண்டு அடித்து விடுகிறான் வில்லன். இதனால் பழைய நினைவுகளை இழந்து பாரதி தவித்து வருகிறார். பாரதியின் பழைய நினைவுகளை மீட்க கண்ணம்மா போராடி வருகிறார். ஒரு வழியாக பாரதிக்கு பழைய நினைவுகள் எல்லாம் திரும்பி விடுகிறது. அவருக்கு தனது மனைவி மற்றும் குழந்தைகளை அடையாளம் கண்டு கொண்டார். இந்த நிலையில் மீண்டும் இருவருக்கும் திருமணம் நடைபெற உள்ளது. அதற்காக முகூர்த்த புடவையை பாரதி தானே தன் கையால் நெய்து கொடுக்கிறார். அந்த மகிழ்ச்சியான தருணங்களுடன் தற்போது ப்ரோமோ வெளியாகியுள்ளது. தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவை நீங்களும் காண கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the below video..!

 

YouTube Video Code Embed Credits: Vijay Television

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்