வீட்டுக்கு வந்த பாரதியிடம் ருத்ர தாண்டவம் ஆடிய சௌந்தர்யா.! சவால் விட்ட பாரதி.! பரபரப்பான ப்ரோமோ !

வெளியிட்டது

பாரதி கண்ணம்மா சீசன் 2 வின் இந்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் பாரதியும் கண்ணம்மாவும் திருமணம் முடிந்து நேராக பாரதியின் வீட்டிற்கு வருகின்றனர். அப்போது அங்கு பாரதியின் தாயார் சௌந்தர்யா மிகப்பெரிய பிரச்சினையை செய்கிறார். அதனால் பாரதி ஒரு அதிரடி முடிவை எடுக்கிறார். அந்த ப்ரோமோ தற்போது வெளியாகியிருக்கிறது. சீரியல் விரைவில் நிறைவடைய இருக்கும் நிலையில் தற்போது தான் சீரியல் சூடு பிடித்திருக்கிறது் அடுத்த பரபரப்பான ப்ரோமோக்கள் தற்போது வெளியாகி வருகிறது. விஜய் தொலைக்காட்சியில் சுமார் 4 வருடங்களுக்கும் மேலாக ஒளிபரப்பாகி மக்கள் மனங்களில் நீங்காத இடம் பிடித்த ஒரு தொடர் என்று சொன்னால் அது பாரதி கண்ணம்மா தான். சீசன் 1ல் அருண் பிரசாத்தும், வினுஷா தேவியும் மிகச் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி வைத்திருந்தனர். சீசன் 1 முடிந்த சில நாட்களிலேயே சீசன் 2வை தொடங்கி அதிர்ச்சி கொடுத்திருந்தனர் நாடகக் குழுவினர். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

வீட்டுக்கு வந்த பாரதியிடம் ருத்ர தாண்டவம் ஆடிய சௌந்தர்யா.! சவால் விட்ட பாரதி.! பரபரப்பான ப்ரோமோ ! 1

இரண்டாவது பாகத்தில் ஹீரோவாக சிபு சூரியன் நடிக்கத் தொடங்கினார். இவர் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ரோஜா சீரியலின் மூலமாக மக்கள் மனங்களில் நீங்காத இடம் பிடித்தவர். இவருக்கு இரண்டாவது நாடகமே விஜய் தொலைக்காட்சியில் பாரதி கண்ணம்மா சீசன் 2வில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஹீரோயினாக வினுஷா தேவியே நடிக்க, சௌந்தர்யா, வெண்பா போன்ற கதாபாத்திரங்கள் இந்த இரண்டாம் பாகத்திலும் தொடர்ந்தது. ஆனால் மக்கள் பாரதி கண்ணம்மா சீசன் 2வை பெரிய அளவில் ரசிக்கவில்லை. ஆரம்பத்தில் இருந்து கதை மிக மெதுவாக சென்று கொண்டிருந்த நிலையில் டிஆர்பி ரேட்டிங்கில் மிகப்பெரிய அடி வாங்கியது. எனவே ப்ரைம் டைமிங்கான ஒன்பது முப்பது மணிக்கு ஒளிபரப்பாகி வந்த இந்த தொடரை 10 மணிக்கு மாற்றி அதிர்ச்சி கொடுத்திருந்தது விஜய் டிவி. அப்படியும் டிஆர்பி யில் எந்தவித முன்னேற்றமும் இல்லாமல் கடைசி இடத்தில் இருந்து வந்ததால் தற்போது இந்த நாடகத்தை முடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

இந்த நிலையில் பாரதி மற்றும் கண்ணம்மா ஆகிய இருவரின் திருமணம் தற்போது நடைபெற்று இருக்கிறது. அத்தை மகள் வெண்பாவை நிச்சயம் செய்துவிட்டு கண்ணம்மாவை திருமணம் செய்து கொண்ட பாரதியை இனி என் முகத்திலேயே முழிக்க கூடாது என்று சொல்லி சௌந்தர்யா அடுத்து விரட்டுகிறார். இருந்த போதிலும் பாரதி மீண்டும் சௌந்தர்யாவின் வீட்டிற்கு வர அவர் தான் தற்கொலை செய்து கொள்வேன் என்று உடலில் மண்ணென்னை ஊற்றிக்கொண்டு பாரதியை மிரட்டுகிறார். இதனால் பாரதி வீட்டுக்குள் தானே வரக்கூடாது ஒரு வாரத்திற்குள் எங்களை நீங்களே வீட்டுற்குள் கூப்பிடும் படி செய்வேன் என்று சொல்லி வீட்டிற்கு வெளியே கூடாரம் அமைத்து அதில் கண்ணம்மாவுடன் தங்குகிறார். அந்த ப்ரோமோ தற்போது வெளியாகியிருக்கிறது. நீங்களும் அந்த வீடியோவைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்.! Watch the Below Video..!

YouTube Video Embed Code Credits: Vijay Television

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்