நீயெல்லாம் ஒரு அப்பாவா? உன் மூஞ்சிய கூட பாக்க புடிக்கல.! பாரதியை திட்டி தீர்த்த குழந்தைகள்

வெளியிட்டது

விஜய் டிவியில் இரவு 9 மணிக்கு ப்ரைம் டைமில் ஒளிபரப்பாகி வரும் ஒரு தொடர் தான் பாரதி கண்ணம்மா, ஆரம்பத்தில் இந்த தொடருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் இருந்து வந்தனர். கருப்பாக இருக்கும் பெண்கள் சந்திக்கும் பிரச்சனைகள், நிறப் பிரச்சினையால் அவரது மாமியார் வீட்டில் நடக்கும் கொடுமைகள் என்று இந்த கதை ஆரம்பிக்கப்பட்டது. இதனால் இது பலருக்கும் ஒரு இன்ஸ்பிரேஷன் ஆக இருந்தது. இந்த சீரியலில் ஆரம்பத்தில் நடித்த ரோஷினியிடம் நிறம் குறைவாக பல பெண்கள் சென்று, நீங்கள் எங்களுக்கு முன்னுதாரணமாக இருக்கிறீர்கள் என்று கூட கூறியிருக்கிறார்கள். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது. 

நீயெல்லாம் ஒரு அப்பாவா? உன் மூஞ்சிய கூட பாக்க புடிக்கல.! பாரதியை திட்டி தீர்த்த குழந்தைகள் 1

பின்னர் இந்த சீரியலில் இருந்து ரோஷினி விலகிவிட கண்ணம்மா ரோலில் வினுஷா தேவி என்பவர் நடித்து வருகிறார். இந்த சீரியலை ரசிகர்கள் எந்த அளவிற்கு விரும்பி பார்க்கத் தொடங்கினார்களோ? அந்த அளவிற்கு ரசிகர்களின் பொறுமையை சோதிக்கும் அளவிற்கு தற்போது கதை நகர்த்துக் கொண்டிருக்கிறது. ஒரு பக்கம் கண்ணம்மாவிற்கு பிறந்த குழந்தைகள் தன் குழந்தைகளே அல்ல என்று பாரதி மல்லுக்கட்டி வருகிறார். அதேசமயம் வில்லி வெண்பாவோ பாரதியை எப்படியாவது திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று காய்களை நகர்த்தி வருகிறார். ஆனால் ஒரு டிஎன்ஏ டெஸ்ட் எடுத்தால் மட்டும் போதும் இந்த கதை முடிந்து விடும். ஆனால் அதை செய்யாமல் பாரதி என்னென்னமோ செய்து வருகிறார். இயக்குனரும் கதையை முடிக்க முடியாமல் இழுத்தடித்து வருகிறார்.

இந்த கதையை முடித்து விடுங்கள் என்று ரசிகர்களே இயக்குனருக்கு கோரிக்கை வைக்கும் அளவிற்கு கதை சென்று கொண்டிருக்கிறது. இந்த நிலையில் இந்த எபிசோடில் வெண்பாவை திருமணம் செய்து கொள்ள இருக்கும் பாரதியை கண்ணம்மா தடுத்து நிறுத்தி கேள்விகளால் திட்டி தீர்த்து விடுகிறார். மேலும் இரண்டு குழந்தைகளும் பாரதி மூஞ்சியை கூட பார்க்க பிடிக்கவில்லை என்று கூறி எல்லாரும் சென்று விடுகின்றனர். இதனால் ரோட்டில் அனாதையாக நின்று அழுது கொண்டிருக்கிறார் பாரதி. அந்த ப்ரோமோவை நீங்களும் காண..! Watch the below video..

Youtube Video Code Embed Credits: Vijay Television

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்