வெண்பாவுக்கு நடந்து முடிந்த திருமணம்.! கிளைமாக்ஸை நெருங்கிய பாரதி கண்ணம்மா.!

வெளியிட்டது

பாரதி கண்ணம்மா சீரியல் தற்போது கிளைமாக்ஸை நெருங்கிக் கொண்டிருக்கிறது. பாரதியின் தோழியான வெண்பா பாரதியை திருமணம் செய்து கொள்ளும் நோக்கத்தில், பல சூழ்ச்சிகளை செய்து வந்தார். அதில் குறிப்பாக பாரதிக்கு குழந்தை பாக்கியம் இல்லை என்ற ஒரு பொய்யை சொல்லி அவரை இத்தனை காலம் நம்ப வைத்து இருந்தார். மருத்துவரான பாரதியும் அதன் உண்மை தன்மையை கண்டறிய முற்படாமல் வெண்பா சொன்னதை அப்படியே உண்மை என நம்பி தனக்கு பிறந்த குழந்தைகளையே தன் குழந்தைகள் இல்லை என்னும் முடிவிற்கு வந்துவிட்டார். தற்போது இந்த சீரியல் அடுத்தடுத்த திருப்பங்களை ஏற்படுத்தி இருக்கிறது. விரைவில் இந்த சீரியல் முடிவுக்கு வரும் என்று தெரிகிறது. அதற்கான சமிக்கைகள் தற்போது தென்படத் தொடங்கி இருக்கின்றன. கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்.

வெண்பாவுக்கு நடந்து முடிந்த திருமணம்.! கிளைமாக்ஸை நெருங்கிய பாரதி கண்ணம்மா.! 1

பாரதியை திருமணம் செய்யும் நோக்கில் அவரை கோவிலுக்கு வரவைத்து தாலி கட்ட முற்பட்டு கொண்டிருந்தார் வெண்பா. அப்போது அங்கே வந்த கண்ணம்மா பாரதியை திட்டி குழந்தைகளையும் அவரிடம் இருந்து பிரித்து கூட்டி சென்று விட்டார். மேலும் வெண்பாவின் வயிற்றில் வளரும் குழந்தைக்கு ரோஹித் தான் அப்பா என்பதும் தெரிய வந்துள்ளது. இதனால் கடுப்பான பாரதி வெண்பாவை திட்டிவிட்டு, என்ன செய்வது தெரியாமல் நடுரோட்டில் அனாதையாக நிற்கிறார். கோவிலுக்கு உள்ளே ரோகித் வெண்பாவின் கழுத்தில் தாலி கட்டி விட்டார். வெண்பா இதற்கு சம்மதிக்க விட்டாலும் அவரது தாய் வலுக்கட்டாயமாக அவரை திருமணம் செய்து வைத்து விட்டார். மேலும் ரோகித்துக்கு தனது சொத்தில் 60% கொடுப்பதாகவும் உறுதியளித்திருக்கிறார் வெண்பாவின் அம்மா.

அதையும் மீறி ரோகித்தை விவாகரத்து செய்து விட்டால் மொத்த சொத்தும் ரோஹித் பெயருக்கு சென்று விடும் என்று மிரட்டி வெண்பாவின் கழுத்தில் தாலி கட்ட வைத்து விட்டார். ரோகித்தும் தாலி கட்டி வெண்பாவை வீட்டிற்கு அழைத்துச் செல்கிறார். பாரதிக்கும் டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட் விரைவில் வர இருப்பதால் அவர் தனது தவறை உணர்ந்து குழந்தை மற்றும் கண்ணம்மாவுடன் இணைந்து மீண்டும் வாழ்வார் என்று தெரிகிறது. ரசிகர்கள் விரைந்து நாடகத்தை முடியுங்கள் என்று கேட்கும் அளவிற்கு இந்த நாடகம் ஜவ்வாக இழுத்து வருவதால் விரைவில் பாரதி கண்ணம்மாவிற்கு சுபம் போடப்படும் என்றே தெரிகிறது. என்று வெளியாகி இருக்கும் ப்ரோமோவை நீங்களும் காண..! Watch the Below Video.!

YouTube Video Code Embed Credits: Vijay Television

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்