பாரதி கண்ணம்மா சீரியலில் நடக்கவுள்ள அதிரடி மாற்றம்.! ரசிகர்களுக்கு ட்விஸ்ட் கொடுத்த சீரியல் இயக்குனர்

வெளியிட்டது

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் முக்கியமான தொடர்களில் ஒன்றுதான் பாரதி கண்ணம்மா. இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் இந்த தொடர். ஆரம்பத்தில் இந்த கதைக்கு பல ரசிகர்கள் இருந்தனர். இதற்கு முக்கிய காரணம் இந்த கதையின் கதாநாயகியாக இருந்த ரோஷினி தான். கருப்பாக இருந்த போதிலும் தன்னால் திரைத்துறையில் வந்து சாதித்து காட்ட முடியும் என்று காட்டியதால் இவருக்கு பல பெண் ரசிகைகள் உண்டு. பல பெண்களுக்கு தன்னம்பிக்கையாக இருந்தார் ரோஷ்ணி. அவரிடமே பல பெண்கள் சென்று நிறம் குறைவாக இருந்த போதிலும் தன்னம்பிக்கையாக நீங்கள் நடிப்பது எங்களுக்கும் தன்னம்பிக்கையை ஏற்படுத்துகிறது என்று ரோஷ்ணியிடமே ரசிகைகள் கூறினர். இந்த நிலையில் திடீரென ஒரு நாள் ரோஷ்ணி நாடகத்திலிருந்து விலகுவதாக அறிவித்தார். அவர் அதே டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக்கு வித் கோமாளி என்ற ரியாலிட்டி ஷோவில் பங்கு பெறுவதற்காக சீரியலை விட்டு விலகினார். அவர் விலகியது முதல் நாடகத்தில் சற்று டிஆர்பி ரேட்டிங் தொடங்கியது.

பாரதி கண்ணம்மா சீரியலில் நடக்கவுள்ள அதிரடி மாற்றம்.! ரசிகர்களுக்கு ட்விஸ்ட் கொடுத்த சீரியல் இயக்குனர் 1

பின்பு பார்ப்பதற்கு ரோஷ்ணியைப் போலவே இருக்கும் வினுஷாவை கண்ணம்மாவாக நடிக்க வைத்தது சீரியல் டீம். வினுஷா தேவி கண்ணம்மாவாக நடிக்க தொடங்கிய போது இவருக்கும் நல்ல வரவேற்பு இருந்தது. சரிந்த டிஆர்பி ரேட்டிங்கும் மீண்டும் எழுத்தொடங்கியது. ஆனால் தற்போது மீண்டும் பாரதி கண்ணம்மா சீரியல் சுணக்கமாக போய்க் கொண்டுள்ளது. இதற்கு முக்கிய காரணம் கதையை கொண்டு செல்ல தெரியாமல் தனது தாயின் ஆசிரியையான வயதான பாட்டிக்கு பாரதி மருத்துவம் பார்ப்பது போன்ற காட்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதை பார்த்த நெட்டிசன்கள் பலரும் “தேவையில்லாமல் வயதான தம்பதிகளை வைத்து பத்து பதினைந்து நாட்களாக ஹாஸ்பிடலே கதி என ஓட்டுகின்றனர் கதையை எப்படி கொண்டு செல்வது என தெரியாமல் பாரதி தன் தாயின் கல்லூரி ஆசிரியைக்கு மருத்துவம் பார்ப்பதையே காட்டி வெறுப்பேற்றுகின்றனர். இந்த வயதான தம்பதிகளின் கதையை வேண்டுமென்றே சேர்த்தது தெரிகிறது இல்லை கதையை எப்படி இழுப்பது?” என்று சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

தற்போது ரசிகர்களின் மனக்குறையை போக்க வேண்டும் என்பதற்காக பாரதி கண்ணம்மா மற்றும் ராஜா ராணி சீரியலை மகா சங்கமம் செய்ய உள்ளனர். இந்த ரெண்டு சீரியலின் இயக்குனரும் பிரவீன் தான். ஏற்கனவே கண்ணம்மாவாக ரோஷ்ணி நடித்துக் கொண்டிருந்தபோது ராஜா ராணி சீரியல் ஆல்யா நடித்துக் கொண்டிருந்தார். அப்போது நடந்த மகா சங்கமம் மக்களால் விரும்பி பார்க்கப்பட்டது. எனவே சரிந்து கிடக்கும் டிஆர்பி ரேட்டிங்கை தூக்கி நிறுத்த தற்போதும் மீண்டும் ஒரு மகா சங்கமத்தை நடந்த இயக்குனர் திட்டமிட்டுள்ளார். ஆனால் இந்த நாடகத்தின் ரசிகர்கள் போதும், மகா சங்கமம் எல்லாம் ஒன்றும் வேண்டாம், நாடகத்தை முதலில் நிறுத்தி விடுங்கள், மொக்கையாக சென்று கொண்டிருக்கிறது என்று கமெண்ட்களில் பதிவிட்டு வருகின்றனர்.

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்