TRP-யில் வாங்கிய பலத்த அடி.! புது சீரியல்களால் அவசர அவசரமாக பழைய சீரியலை முடிக்கும் விஜய் டிவி.!

வெளியிட்டது

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா சீசன் 2 சீரியல் தற்போது நிறைவடைய இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. விரைவில் பாரதி கண்ணம்மா சீசன் 2 வின் கிளைமேக்ஸ் ஒளிபரப்பாக இருப்பதாக தற்போது தகவல்கள் இணையத்தில் வேகமாக கசிந்து கொண்டிருக்கின்றது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் முக்கியமான சீரியலில் ஒன்று தான் பாரதி கண்ணம்மா சீசன் 2. ஆரம்பத்தில் இரவு 9:30 மணிக்கு ஒளிபரப்பாகி வந்த இந்த சீரியலுக்கு சரியான வரவேற்பு கிடைக்காததால் இரவு 10 மணிக்கு நேரத்தை மாற்றி அமைத்திருந்தனர். தற்போது வெண்பாவை திருமண நிச்சயதார்த்தம் செய்து கொண்ட பாரதி அவரை கழட்டி விட்டு விட்டு கண்ணம்மாவை திருமணம் செய்து கொண்டிருக்கிறார். கதையே இப்பொழுதுதான் சூடு பிடிக்க துவங்கிய நிலையில் தற்போது இந்த கதை முடிவுக்கு வர இருப்பதாக தகவல் வெளியாகி பாரதி கண்ணம்மா ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

TRP-யில் வாங்கிய பலத்த அடி.! புது சீரியல்களால் அவசர அவசரமாக பழைய சீரியலை முடிக்கும் விஜய் டிவி.! 1
பாரதி கண்ணம்மா சீசன் 1 கொடுத்த மிகப்பெரிய வெற்றியால் பாரதி கண்ணம்மா சீசன் 2 எடுக்கப்பட்டது. சீசன் 1 முடிந்த கையோடு சீசன் 2வை துவக்கியிருந்தனர். இந்த சீசனிலும் பாரதி கண்ணம்மா, சௌந்தர்யா, வெண்பா போன்ற கதாபாத்திரங்கள் இடம்பெற்று இருந்தது. முதல் சீசனில் பாரதியாக அருண்பிரசாத் நடிக்க, கண்ணம்மாவாக வினுஷா தேவி நடித்திருந்தார். இரண்டாவது பாகத்தில் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி பலரின் மனங்களை வென்ற ரோஜா சீரியலின் சிபு சூரியன் நடித்து வந்தார். பாரதி கண்ணம்மா சீசன் 2 கதைப்படி பாரதி பணக்கார வீட்டுப் பிள்ளையாக இருக்கிறார். இதற்கிடையில் சிறையில் இருந்து வெளியே வரும் சித்ரா கண்ணம்மா என்று பொய் சொல்லி அவரது வீட்டிற்குள் நுழைகிறார். அவருக்கும் பாரதிக்கும் அறிமுகம் ஏற்படுகிறது, இருவரும் காதலிக்க தொடங்குகின்றனர். தற்போது இந்த காதல் திருமணம் வரை சென்றிருக்கிறது. கண்ணம்மா கழுத்தில் பாரதி தனது தாயை சௌந்தர்யாவை எதிர்த்து தாலியை கட்டி இருக்கிறார்.

பாரதியை வெண்பாவிற்கு திருமணம் செய்து வைக்க அவரது தாயார் சௌந்தர்யா முயற்சி செய்கிறார். இதனால் பாரதிக்கும் வெண்பாவிற்கும் திருமண நிச்சயம் ஏற்பாடுகள் நடைபெறுகிறது. இந்த நிலையில் சௌந்தர்யா மற்றும் வெண்பாவிற்கு தெரியாமல் கண்ணம்மாவை கோவிலுக்கு வரச் சொல்லி அவரை சம்மதிக்க வைத்து அவர் கழுத்தில் தாலியும் கட்டி இருக்கிறார் பாரதி. இப்போது அங்கு வரும் சௌந்தர்யா நீ எனக்கு மகனே கிடையாது நீ என் முகத்திலேயே முழிக்க கூடாது என்று சொல்லி அவரை திட்டி அனுப்பி விடுகிறார். இதனால் பாரதியும் கண்ணம்மாவும் அதிர்ச்சியில் உடைந்து போய் நிற்கின்றனர். கதை இப்படியான களத்துடன் நகர்ந்து கொண்டிருக்கும் நிலையில் தற்போது பாரதி கண்ணம்மா சீசன் 2 வின் கிளைமாக்ஸ் ஒளிபரப்பாக இருப்பதாக தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. அதற்கு முக்கிய காரணமாக விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக இருக்கும் இரண்டு புது நிகழ்ச்சிகள் என்று கூறப்படுகிறது.


நடிகை ராதிகா சரத்குமார் தனது ராடன் மீடியா சார்பில் தயாரித்து வரும் கிழக்கு வாசல் தொடர் ஒளிபரப்பாக இருக்கிறது. பாண்டியன் ஸ்டோர் தொடர் நிறைவடைந்த பிறகு கிழக்கு வாசல் ஒளிபரப்பாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் முடிவுக்கு வருவதாக தெரியவில்லை, கதைக்களம் அடுத்தடுத்து விறுவிறுப்பாக நகர்ந்து வருகிறது. இந்த நிலையில் தற்போது பாரதி கண்ணம்மாவை முடித்துவிட்டு பிக்பாஸ் சீசன் 7 மற்றும் கிழக்கு வாசல் தொடர்களை ஒளிபரப்ப இருப்பதாக தற்போது தகவல் வெளியாகியிருக்கிறது. இது எந்த அளவிற்கு உறுதியான தகவல் என்று தெரியவில்லை. விரைவில் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை பாரதி கண்ணம்மா சீரியல் குழுவினர் வெளியிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.! கதை இப்பொழுது தான் சூடு பிடிக்க தொடங்கியிருக்கும் நிலையில் பாதியிலேயே பாரதி கண்ணம்மா சீசன் 2 நிறுத்தப்படுவது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. மௌன ராகம் சீசன் 2 தொடர் போல பிக்பாஸ் முடிந்த பிறகு மீண்டும் ஒளிபரப்பாகலாம் என்கிற கருத்தும் நிலவி வருகிறது.

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்