விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா சீரியல் விரைவில் முடிய உள்ளதாகவும், கிளைமாக்ஸ் காட்சிகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் தற்போது ஒரு வீடியோ இணையத்தில் வைரலாகி இருக்கிறது. ஆரம்பத்தில் ரியாலிட்டி ஷோக்களை மட்டும் நடத்தி வந்த விஜய் டிவி ஒரு கட்டத்தில் நாடகங்களையும் ஒளிபரப்பத் தொடங்கியது. நாடகங்களின் ராஜாவாக இருக்கும் சன் டிவிக்கு போட்டியாக தற்போது விஜய் டிவி, ஜீ தமிழ், கலர்ஸ் தமிழ் என பல தொலைக்காட்சிகள் நாடகங்களை ஒளிபரப்பி வருகின்றன. இந்த நாடகங்களுக்கு பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் இருக்கிறார்கள். அப்படி ஒரு வைரல் நாடகமாக இருப்பது தான் பாரதி கண்ணம்மா. இந்த தொடர் கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் விஜய் டிவியில் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது.

ஆரம்பத்தில் இந்த கதை வித்தியாசமான நோக்கத்துடன் எடுக்கப்பட்டது. அதாவது பாரதியின் தோழி வெண்பா பாரதியை திருமணம் செய்து கொள்ளும் நோக்கில், அவர் வேறு எந்த பெண்ணையும் திருமணம் செய்யக்கூடாது என்பதற்காக அவருக்கு குழந்தையின்மை பிரச்சனை இருப்பதாக கூறி நாடகமாடி வந்தார். ஆனால் ஒரு கட்டத்தில் பாரதி கண்ணம்மாவை திருமணம் செய்து கொள்வார். கண்ணம்மாவின் தங்கை அஞ்சலியும் பாரதியை காதலித்து வருவார். பின்னர் அஞ்சலி பாரதியின் தம்பி அகிலனை திருமணம் செய்து கொண்டு பாரதியை துன்புறுத்தி வருவார். பாரதியின் தாயாருக்கு கருப்பு நிறம் என்றாலே பிடிக்காது. ஆனால் கண்ணம்மா கருப்பாக இருப்பதால் அவருக்கு கண்ணம்மாவை சுத்தமாக பிடிக்காது. இதனால் அஞ்சலியும் பாரதியின் தாயாரும் சேர்ந்து கொண்டு கண்ணம்மாவை கொடுமைப்படுத்தி வருவார்கள்.
பிறகு ஒரு கட்டத்தில் பாரதிக்கு இரண்டு குழந்தைகள் பிறக்கும். ஆனால் தனக்கு குழந்தை பிறக்காது என்று வெண்பாவால் ஏமாற்றப்பட்டு வந்த பாரதிக்கு குழந்தைகள் பிறந்ததை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. இதனால் கண்ணம்மா மீது சந்தேகப்பட்டு அவரை வீட்டை விட்டு வெளியே அனுப்பி விடுகிறார். ஒரு கட்டத்தில் பாரதிக்கு இந்த குழந்தைகள் தன்னுடையதுதானா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. அதற்காக தற்போது டிஎன்ஏ டெஸ்ட் எடுத்திருக்கிறார். ஒரு டி.என்.ஏ டெஸ்ட் எடுத்து பார்த்திருந்தால் இந்த பிரச்சனை என்று முடித்திருக்கும். ஆனால் அதை விட்டுவிட்டு இயக்குனர் இந்த கதையை எங்கே எங்கேயோ கொண்டு சென்றுவிட்டார் .ஐந்து ஆண்டுகளாக அரைத்த மாவையே அரைத்து வருகிறார். இந்த நிலையில் தற்போது இந்த தொடரின் கிளைமாக்ஸ் காட்சிகள் என்ற ஒரு வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
பாரதி கண்ணம்மா தொடரை விரைந்து முடிக்குமாறு இந்த தொடரை பார்த்து வந்த ரசிகர்கள் இயக்குனருக்கு கமெண்டில் கோரிக்கை விடுக்க தொடங்கினர். எனவே ரசிகர்களின் கோரிக்கையை ஏற்று விரைவில் இந்த நாடகத்தை இயக்குனர் முடிப்பார் என்று தெரிகிறது. கிளைமாக்ஸ் காட்சிகள் என்ற அந்த வீடியோவில் இந்த சீரியலில் நடித்து வரும் அனைவரும் அமர்ந்திருக்கின்றனர். ஆனால் இந்த தகவல் எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை. விரைவில் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த வீடியோவை நீங்களும் காண.! Watch the Below Video..!