துபாயில் கப்பலில் வைத்து மகனின் பிறந்த நாளை பிரம்மாண்டமாக கொண்டாடிய வெண்பா.!

வெளியிட்டது

ஹீரோயினாக நடித்து புகழ் பெறுவதைவிட வில்லியாக நடித்து புகழ்பெற்றவர்கள் பலர் இருக்கிறார்கள். குறிப்பாக சின்னத்திரையில் மிகச்சிறந்த வில்லியாக கலக்கி வருபவர் நடிகை ஃபரீனா. இவர் பாரதி கண்ணம்மா தொடரில் வெண்பா என்கிற கதாபாத்திரத்தில் வில்லியாக நடித்து வருகிறார். சீரியலில் நடிப்பதற்கு முன்பு பல தொலைக்காட்சிகளில் நிகழ்ச்சி தொகுப்பாளினியாக வேலை பார்த்து வந்த ஃபரீனா வுக்கு விஜய் டிவியில் பாரதிகண்ணம்மா சீரியல் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. பாரதியின் தோழியாகவும் வில்லியாகவும் இவர் இந்த சீரியலில் நடித்து வருகிறார். இந்தத் தொடரில் ஹீரோயினாக இருக்கும் கண்ணம்மாவிற்கு எவ்வளவு ரசிகர்கள் இருக்கிறார்களோ, அதைவிட கூடுதலான ரசிகர்கள் ஃபரினாவுக்கு இருக்கிறார்கள் என்று சொன்னால் அது மிகையில்லை. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

துபாயில் கப்பலில் வைத்து மகனின் பிறந்த நாளை பிரம்மாண்டமாக கொண்டாடிய வெண்பா.! 1

ஃபரீனாவிற்கு சமீபத்தில் திருமணம் ஆகி ஒரு ஆண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தை பிறந்த சில நாட்களிலேயே மீண்டும் சீரியலுக்கு திரும்பி நடிக்க தொடங்கினார். இவர் கர்ப்பமாக இருந்த போதும் சீரியலில் நடித்து வந்தார். ஆனால் இவர் வயிறு தெரியாதது போல் இவருக்காக காட்சிகளை அமைத்திருந்தனர். இன்ஸ்டாகிராமில் மிக ஆக்டிவாக இருக்கும் ஃபரீனா அவ்வப்போது ரீல்ஸ் வீடியோக்கள் மற்றும் தனது மகனுடன் இருக்கும் வீடியோக்களை பகிர்ந்து வருகிறார். இவரது வீடியோக்கள் லட்சக்கணக்கான பார்வையாளர்களை தாண்டுவது வழக்கமாக இருக்கிறது. தற்போது இவரின் மகனின் முதல் பிறந்தநாளை இவர் கப்பலில் கேக் வெட்டி கொண்டாடி இருக்கிறார்.

துபாயில் உள்ள மெரினா க்ரூஸ் யாட்ச் என்கிற கப்பலில் அவர் தனது மகனுக்கு கேக் வெட்டி பிறந்த நாளை கொண்டாடி இருக்கிறார். அந்தப் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை தனது instagram பக்கத்தில் பதிவேற்றி இருக்கிறார். அந்த வீடியோக்கள் தற்போது இணையத்தில் அவர் ரசிகர்களால் பெருமளவில் பகிரப்பட்டு வருகிறது. நீங்களும் அந்த வீடியோவை காண..! Watch the below video.!

YouTube Video Code Embed Credits: Tamil Viral Videos 24×7

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்