எப்படி இருக்கிறார் இயக்குனர் சிகரம்? சுய நினைவுடன் இருக்கிறாரா? பாரதிராஜாவின் நண்பர் விரிவான விளக்கம்

வெளியிட்டது

தமிழ் சினிமாவில் இயக்குனர் இமயமாக இருப்பவர் பாரதிராஜா. இவர் கடந்த ஒரு வார காலமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். தற்போது இவர் மருத்துவமனையில் இருந்து அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். கடந்த வாரம் மதுரைக்கு விமானத்தில் சென்ற அவர் விமான நிலையத்திலேயே மயங்கி விழுந்தார். அவரை மதுரையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதித்து அவருக்கு சிகிச்சை கொடுக்கப்பட்டு வந்தது. பின்பு சென்னையில் உள்ள தனது இல்லத்திற்கு திரும்பினார் பாரதிராஜா. வீட்டிலேயே தங்கி ஓய்வெடுத்த வந்த அவருக்கு மீண்டும் உடல்நிலை சரியில்லாமல் போனது. இதனால் சென்னையில் உள்ள ஒரு பிரபல தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு அவர் உடல் நிலையில் எந்த ஒரு முன்னேற்றமும் ஏற்படாத காரணத்தினால் அவரை வேறு ஒரு மருத்துவமனைக்கு மாற்ற அவரது குடும்பத்தினர். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

எப்படி இருக்கிறார் இயக்குனர் சிகரம்? சுய நினைவுடன் இருக்கிறாரா? பாரதிராஜாவின் நண்பர் விரிவான விளக்கம் 1

இதனால் எம்ஜிஎம் மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருக்கிறார். அவரை பலரும் சந்தித்து நலம் விசாரித்து வருகின்றனர். குறிப்பாக அவரது நண்பர் வைரமுத்து சந்தித்து நலம் விசாரித்தார். பின்னர் அவர் ட்விட்டரில் உடல் மிகவும் நலிந்து விட்டது, டாக்டர்கள் சூழ்ந்து நிற்கிறார்கள், மீண்டும் இந்த திரையுலகையை ஆள அவர் வருவார் என்று ட்விட்டரில் பதிவிட்டு இருந்தார். பின்னர் இன்றும் அவரை பலரும் சென்று சந்தித்து வந்தனர். இந்த நிலையில் பாரதிராஜா தரப்பிலிருந்து தற்போது மருத்துவமனையில் இருந்து அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டிருக்கிறது. அதில் என் இனிய தமிழ் மக்களே வணக்கம் உங்கள் பாசத்திற்குரிய பாரதிராஜா பேசுகிறேன், உடல்நல குறைவு காரணமாக சமீபத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நான், மருத்துவர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்களின் சிறப்பான சிகிச்சை மற்றும் கனிவான கவனத்தின் காரணமாக நலம் பெற்று வருகிறேன்.மருத்துவமனையில் பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை என்பதால் நேரில் காண வர வேண்டாம், என் மேல் அன்பு கொண்ட அனைவரையும் பணிவோடு கேட்டுக்கொள்கிறேன், விரைவில் பூரண நலம் பெற்று உங்கள் அனைவரையும் நேரில் சந்திக்கிறேன். மருத்துவமனையில் நான் அனுமதிக்கப்பட்ட செய்தியை அறிந்தவுடன் நேரிலும், தொலைபேசி வாயிலாகவும், இணையதளம் மூலமாகவும் என்னை விசாரித்த மற்றும் நலம் பெற பிராத்தித்த அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். விரைவில் சந்திப்போம் என்று அவர் தனது அறிக்கையில் தெரிவித்து இருக்கிறார். அந்த வீடியோவை நீங்களும் காண.. Watch the below video..

 

YouTube Video Code Embed Credits: Thanthi Tv

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்