Categories: சினிமா

எப்படி இருக்கிறார் பாரதி ராஜா..மருத்துவமனையில் திடீரென செய்தியாளர்களை சந்தித்த மகன் மனோஜ்

வெளியிட்டது

உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த பாரதிராஜா அவர்களின் பற்றி தற்போது அவரது மகன் மனோஜ் செய்தியாளர்களை சந்தித்தார். அதன் முழு விவரங்களை தற்போது பார்க்கலாம். கடந்த 23ஆம் தேதி மதுரை விமான நிலையத்தில் உடல் நலக்குறைவால் மயங்கி விழுந்தார் இயக்குனர் பாரதிராஜா. அவரை மீட்டு உடனடியாக மதுரையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர் ஒரு நாள் ஓய்வுக்குப் பின்பு அவர் சென்னையில் உள்ள நீலாங்கரையில் தனது வீட்டில் ஓய்வெடுத்து வந்தார். பின்னர் மீண்டும் உடல் நலக்குறைவு ஏற்படவே அவர் சென்னையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரது உடல் நிலையில் எந்த முன்னேற்றமும் இல்லை. கூடவே நுரையீரலில் தொற்று பாதிப்பு ஏற்பட்டதால் சென்னை அமைந்தகரையில் உள்ள எம்ஜிஎம் மருத்துவமனைக்கு உடனடியாக மாற்றப்பட்டார் பாரதிராஜா. கீழே உள்ள வீடியோவை பார்க்கவும். 

எப்படி இருக்கிறார் பாரதி ராஜா..மருத்துவமனையில் திடீரென செய்தியாளர்களை சந்தித்த மகன் மனோஜ் 1

அங்கு அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் பாரதிராஜாவின் உடல்நிலை குறித்து பல வதந்திகள் பரவி வந்தது. பாரதிராஜாவின் குடும்பத்தினரால் பணம் கட்ட முடியவில்லை என்றும், அதனால் அவரது நண்பர் ஒருவரே பணத்தை கட்டி இருக்கிறார் என்றும் தகவல்கள் கொடிகட்டி பறந்தனர். இதற்கெல்லாம் விளக்கம் அளிக்கும் வகையில் பாரதிராஜாவின் மகனும், நடிகருமான மனோஜ் தற்போது விளக்கம் ஒன்றை அளித்திருக்கிறார். அவர் பேசும் பொழுது பாரதிராஜாவிற்கு நல்ல உடல் நிலையில் முன்னேற்றம் இருப்பதால் நாளை அவரை வீட்டிற்கு அழைத்துச் செல்ல இருப்பதாக கூறினார். மேலும் பணம் கட்ட முடியாமல் எங்கள் குடும்பம் இருந்ததாகவும் செய்திகள் பரப்பப்பட்டது. அந்தசெய்திகளில் உண்மைத் தன்மை இல்லை. அவ்வாறு செய்திகளை பரப்புவதற்கு முன்பு உறுதிப்படுத்திவிட்டு இது போன்ற செய்திகளை பரப்புங்கள் என்று செய்தியாளர்களை கேட்டுக் கொண்டார்.

 

பாரதிராஜாவிற்கு தேவையான அனைத்து மருத்துவ சிகிச்சைகளுக்குமான செலவுகளையும் எங்கள் வங்கி கணக்கில் இருந்தே செலுத்தப்பட்டிருக்கிறது, எம்ஜிஎம் மருத்துவமனை ஒரு கோவில் மாதிரி, இங்கு பணிபுரிவர்கள் அனைவரின் பணியும் பாராட்டத்தக்கது, பாரதிராஜா அட்மிட்டான சில நாட்களிலேயே ஐசுவிலிருந்து சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டு விட்டார். அவருக்கு நுரையீரல் பிரச்சனை இருந்தது, தற்போது அதுவும் சரி செய்யப்பட்டு விட்டது. தற்போது பாரதிராஜா முழுமையாக குணமடைந்து விட்டார் என்று மனோஜ் தெரிவித்தார். மேலும் தற்போது படங்களில் நடிக்க விரும்புவதாக பாரதிராஜா கூறுகிறார். அவர் நான்கு படங்களில் ஒப்பந்தமாகி இருந்தார். தங்கர் பச்சான் படத்தில் நடித்துக் கொண்டிருந்த போதுதான் அவருக்கு உடல்நிலை சரியில்லாமல் போனது, எனவே வீடு திரும்பிய பின்பு மீதி படத்தை அவர் நடித்துக் கொடுப்பார் என்றும் மனோஜ் கூறினார்.

மேலும் மருத்துவர் கூறுகையில், அவருக்கு நுரையீரலில் தொற்று இருந்ததால் தொடர் கண்காணிப்பில் இருக்க வேண்டிய சூழ்நிலை இருந்தது. தற்போது அவர் மிக நன்றாக இருக்கிறார். கேலி பேச்சுகள் பேசி மற்றவர்களை சிரிக்க வைக்கிறார். டான்ஸ் ஆட தெரியுமா என்று கேட்டு அவரே நடனமும் மாறி காட்டுகிறார். அந்த அளவிற்கு அவர் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது, விரைவில் செய்தியாளர்களை சந்திப்பார் என்று மருத்துவர் கூறினார். திரைத்துறைக்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்த அந்த இயக்குனர் இமயம் மீண்டும் நலம் பெற்று வர வேண்டும் என்பதே பலரது பிரார்த்தனைகளாக இருந்தது. அது தற்போது நிறைவேறியும் இருக்கிறது. அவரின் முழு பெட்டியை நீங்களும் காண.. Watch the below video..

Youtube Video Code Embed Credits: Black Pepper News

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்