பாரதி கண்ணம்மாவை பங்கமாக கலாய்த்து விட்டாரா பாக்யா.? கிளப்பிட்ட ரசிகர்கள்.. என்ன சேதின்னு தெரியுமா?

வெளியிட்டது

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் இரண்டு முக்கியமான தொடர்கள் தான் பாக்கியலெட்சுமியும், பாரதி கண்ணம்மாவும். இந்த இரண்டு சீரியல்களுக்கும் மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு இருக்கிறது. டி.ஆர்.பி ரேட்டிங்கிலும் சரி, விறுவிறுப்பிலும் சரி. டாப்பில் இருக்கும் தொடர்கள். சமீபத்தில் வெளியான பாக்கிய லெட்சுமி சீரியலின் ஒரு ப்ரோமோ பாரதி கண்ணம்மா சீரியலை தாக்கி இருப்பதாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். பாரதி கண்ணம்மா சீரியலின் கதையே பாரதி மேல் காதல் கொள்ளும் வில்லி வெண்பா பாரதியை அடைவதற்காக பாரதிக்கு குழந்தை பெற இயலாது என்று சொல்லி, பாரதியை வெகு நாட்களாக ஏமாற்றி வருகிறார். ஆனால் அவரது மனைவி கண்ணம்மாவுக்கு இரண்டு குழந்தை பிறந்தது. இதனால் மனைவி மீது சந்தேகப்பட்ட அவர் கண்ணம்மாவை வீட்டை விட்டு வெளியே துரத்தி விடுகிறார். இந்த கதையை சுமார் ஐந்து ஆண்டுகளாக இழுத்து அடித்து வருகின்றனர்.

பாரதி கண்ணம்மாவை பங்கமாக கலாய்த்து விட்டாரா பாக்யா.? கிளப்பிட்ட ரசிகர்கள்.. என்ன சேதின்னு தெரியுமா? 1

ஒரு டிஎன்ஏ டெஸ்ட் எடுத்தால் போதும், ஆனால் கதையை நீட்டிப்பதற்காக இவ்வாறு ஐந்து வருடங்களாக இழுத்து அடித்து வருவதால் கதையை விரைந்து முடிக்குமாறு இயக்குனருக்கு பலரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்த நிலையில் தற்போது பாக்கியலட்சுமி சீரியல் விறுவிறுப்பை எட்டி வருகிறது. அதில் வீட்டை விட்டு பாக்யா விலகி தனியாக செல்வது போன்ற காட்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதனால் கோபி வீட்டில் இருந்து அவரை வெளியே துரத்துவது போன்ற காட்சிகளும் காட்டப்பட்டு வருகிறது. ஆனால் எதிர்பாராத விதமாக இது என் வீடு, நீங்கள்தான் வெளியே போக வேண்டும் என்று கோபியை பாக்கியா வெளியே போக சொல்கிறார். மேலும் பெட்டியில் துணிகளை வைத்து அவரை வெளியே போகுமாறு சொல்கிறார். இந்த சீரியல் தற்போது விறுவிறுப்பான கட்டத்தை எட்டி உள்ளது.

மேலும் பாக்யா கோபியை பார்த்து சில வசனங்களை பேசுகிறார். அதில் நான் ஏன் வெளியே போக வேண்டும்? நீங்கள் வெளியே போங்க.. ஆம்பளைகள் என்ன தப்பு வேண்டுமானாலும் செய்வீர்கள், ஆனால் பெண்கள் எந்த தப்பும் செய்யாமல் அழுது கொண்டே நடுரோட்டில் நிற்க வேண்டுமா? என்றெல்லாம் கேள்வி கேட்கிறார். இதை பாக்யா, கண்ணம்மா சீரியலை பார்த்து தான் கேட்கிறார் என்று சிலர் கிளப்பி விட்டுள்ளனர். பாரதி சந்தேகப்பட்டு கண்ணம்மாவை வெளியே அனுப்பிய போது, அவர் ஒரு பையை தூக்கிக்கொண்டு தெருத்தெருவாக நடந்தார். இதைத்தான் கலாய்க்கும் விதமாக பாக்கியலட்சுமி சீரியலில் பாக்கியா பேசும் காட்சிகளில் வைக்கப்பட்டுள்ளதாக, நெட்டிசன்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர். பாரதி கண்ணம்மா சீரியல் அரைத்த மாவை அரைத்து ரசிகர்களுக்கு மிகுந்த சலிப்பு ஏற்பட்டு இருக்கிறது. தற்போது சக தொடரே கலாய்க்கும் அளவிற்கு பாரதி கண்ணம்மா வந்து விட்டதே என்று ரசிகர்களும் பாரதி கண்ணம்மாவை கலாய்த்து வருகின்றனர்.

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்