பாரதி கண்ணம்மா சீரியலின் இந்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. அதில் பாரதியை லட்சுமி ஏற்றுக் கொண்டுள்ளதாக தெரிகிறது. பாரதி கண்ணம்மா சீரியல் அடுத்தடுத்த விறுவிறுப்பான கட்டங்களை எட்டி வருகிறது. இத்தனை நாள் பாரதி, தன்னுடைய மனைவி மீது சந்தேகப்பட்டு அவருக்கு பிறந்த குழந்தைகள் தன் குழந்தைகளே இல்லை என்று ஒதுக்கி வைத்திருந்தார். இருந்தபோதிலும் ஒரு குழந்தை பாரதியிடமும், ஒரு குழந்தை கண்ணம்மாவிடமும் வளர்ந்து வந்தது. இந்த நிலையில் டிஎன்ஏ டெஸ்ட் மூலமாக பாரதி இந்த குழந்தைகள் தன்னுடைய குழந்தைகள் தான் என்பதையும், கண்ணம்மா மீது எந்த தவறும் இல்லை என்பதையும் தெரிந்து கொள்கிறார். இதனால் கண்ணம்மா காலில் விழுந்து கதறி தன்னுடன் மீண்டும் இணைந்து வாழுமாறும், குழந்தைகளுடன் சேர்ந்து புதிய வாழ்க்கை தொடங்கலாம் என்று கதறி அழுது கொண்டிருக்கிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ஆனால் கண்ணம்மாவோ இத்தனை நாட்களாக நாங்கள் இதைத்தான் சொல்லிக் கொண்டிருந்தோம். அப்பொழுதெல்லாம் நீங்கள் வெண்பாவின் பேச்சை கேட்டுக்கொண்டு ஆடிக் கொண்டிருந்தீர்கள். இப்போது உங்களுக்கு எங்கே இருந்து ஞானோதயம் வந்தது என்று பாரதியை நாக்கை புடுங்கும் விதமாக கேட்டுவிட்டு ஊரையே காலி செய்துவிட்டு தற்போது வேறு ஊருக்கு சென்று விட்டார். இப்போதே கண்ணம்மா மற்றும் குழந்தைகளை பாரதி தேடி ஊர் ஊராக அலைந்து கொண்டிருக்கும் நேரத்தில் பாரதியின் மொபைலுக்கு லொகேஷன் மெசேஜ் வருகிறது. அந்த லொகேஷனை தேடிச் செல்லும் பாரதி கண்ணம்மா இருக்கும் இடத்தை கண்டுபிடித்து விடுகிறார். ஆனால் ஊர் பஞ்சாயத்தை கூட்டி பாரதி ஊரில் இருக்கக் கூடாது என்று தீர்மானம் போடுகின்றனர். அதையும் மீறி பாரதி இந்த ஊரில் தான் இருப்பேன் என்று சபதம் எடுக்கிறார்.
இந்த நிலையில் பள்ளியில் வைத்து ஹேமாவை சந்திக்கும் பாரதி, நீ எனக்கு லொகேஷன் அனுப்பினாய் என்று சொல்ல ஹேமா நான் அதெல்லாம் செய்யவில்லை என்று முகத்தில் அடித்தார் போல் கூறி விட்டு சென்று விட்டார். ஆனால் அங்கு வரும் லட்சுமி உங்களுக்கு லோகேஷன் அனுப்பியது நான்தான், உங்களுக்கு சாப்பாடு வைத்ததும் நான்தான் உங்களை நான் மிகவும் மிஸ் செய்கிறேன் டாக்டர் அப்பா, இனிமேல் நான் உங்களை அப்பா என்று கூப்பிடலாமா என்று கேட்டு கதறி அழுகிறார். அதை கண்டு பாரதியும் மனம் உடைந்து அழுகிறார். மிக எமோஷனலாக இருக்கும் அந்த ப்ரோமோவை நீங்களும் காண..! கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the below video..!
Youtube Video Code Embed Credits: Vijay Television