கண்ணம்மாவை விட்டு ரொம்ப தூரம் செல்ல இருக்கும் பாரதி.! கண்கலங்கி நிற்கும் கண்ணம்மா.!

வெளியிட்டது

பாரதிகண்ணம்மா சீரியல் தற்போது விறுவிறுப்பான கட்டத்தையும், இறுதி கட்டத்தையும் எட்டி வருகிறது. அந்த வகையில் இன்று வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் பாரதிக்கு மிகப்பெரிய வாய்ப்பு ஒன்று கிடைத்திருக்கிறது. இதனால் கண்ணம்மா என்ன செய்யப் போகிறார் என்கிற பரபரப்பு பார்க்கும் ரசிகர்களுக்கு ஏற்பட்டிருக்கிறது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா தொடருக்கு என்று தனி ரசிகர் பட்டாளமே இருந்து வருகிறது. மலையாளத்தில் ஒளிபரப்பான “கருத்த முத்து” என்கிற தொடரை அடிப்படையாகக் கொண்டு இந்த நாடகம் எடுக்கப்பட்டு வருகிறது. ஆரம்பத்தில் வேறு மாதிரியான கதைக் களத்துடன் தொடங்கிய இந்த தொடர் தற்போது எங்கெங்கோ சென்று விட்டது. இயக்குனர் கதையை வேறு பாதைக்கு திருப்பி இருக்கிறார். பலரும் இந்த நாடகத்தை முடித்து விடுமாறு இயக்குனருக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர்.! பாரதி தனக்கு குழந்தை பிறக்காது என்று நம்பிக் கொண்டிருக்கும் நிலையில் அவருக்கு இரட்டைக் குழந்தைகள் பிறக்கின்றது. இங்கு இருந்து பிரச்சனைகள் ஆரம்பமானது. ப்ரோமோ வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.!

கண்ணம்மாவை விட்டு ரொம்ப தூரம் செல்ல இருக்கும் பாரதி.! கண்கலங்கி நிற்கும் கண்ணம்மா.! 1
இந்த இரண்டு குழந்தைகளும் தன்னுடைய குழந்தைகளே இல்லை என்று பாரதி கண்ணம்மாவை சந்தேகப்பட்டு வீட்டை விட்டு வெளியே அனுப்பி விடுகிறார். கண்ணம்மாவும் கஷ்டப்பட்டு குழந்தைகளை வளர்த்து வருகிறார். ஒரு கட்டத்தில் டிஎன்ஏ டெஸ்ட் எடுத்து பார்க்கும் பாரதிக்கு இந்த உண்மைகள் அனைத்தும் தெரிய வருகிறது. பின்னர் கண்ணம்மாவிடம் அழுது புரண்டு மன்னிப்பு கேட்டு குழந்தைகளுடன் ஒன்றாக வாழலாம் என்று கதறி அழுகிறார். ஆனால் கண்ணம்மாவோ இத்தனை நாள் என்னை சந்தேகப்பட்ட உன்னுடன் வாழ விருப்பம் இல்லை என்று சொல்லி, தனது சொந்த கிராமத்திற்கு புதுக்கோட்டையில் சென்று வசித்து வருகிறார். அங்கு வரும் பாரதி கண்ணம்மா மனதை மாற்றுவதற்காக பல முயற்சிகளில் ஈடுபடுகிறார். ஒரு கட்டத்தில் அந்த ஊரில் இருக்கும் வில்லன் கண்ணம்மாவின் நடத்தையை கேள்விக்குறியாக்க சில சதித்திட்டங்களை தீட்டுகிறான். அந்த முயற்சியில் வில்லன் தோற்றுப் போகிறான்.


இதனால் பாரதியை பழிவாங்க வேண்டும் என்ற நோக்கில் அவரது தலையில் பெரிய இரும்பு ராடை கொண்டு அடித்து விடுகிறான் வில்லன். இதனால் பழைய நினைவுகளை இழந்து பாரதி தவித்து வருகிறார். பாரதியின் பழைய நினைவுகளை மீட்க கண்ணம்மா போராடி வருகிறார். இந்த நிலையில் பாரதிக்கு நியூயார்க்கில் உள்ள மிகப்பெரிய ஒரு பல்கலைக்கழகத்தில் மருத்துவ மேல் படிப்பு படிப்பதற்கான வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இதனால் பாரதியின் பழைய நினைவுகளை எப்படியாவது மீட்டு விட வேண்டும் என்று பாரதியின் தாயார் கண்ணம்மாவிடம் கெஞ்சி கேட்டுக் கொண்டிருக்கிறார். அதற்கு கண்ணம்மா என்ன செய்யப் போகிறார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவை நீங்களும் காண கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the below video..!

 

YouTube Video Code Embed Credits: Vijay Television

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்