“எ டான்ஸ் பெய் பாரதிராஜா”!! புல்லட் சாங் பாடலுக்கு நடனம் ஆடி க்ரித்தி ஷெட்டிக்கு போட்டிக்கொடுக்கும் பாரதிராஜா!!

வெளியிட்டது

அடுத்த மாதம் வெளிவரவிருக்கும் “தி வாரியர்” படத்திற்கு ப்ரோமோஷன் வேலைகள் பல வகையிலும் முடக்கி விடப்பட்டுள்ளது. தெலுங்கு நடிகர் ராம் பொத்தினேனி, நாயகி க்ரித்தி ஷெட்டி, ஆதி என பலர் நடித்துள்ள இந்த படம் வருகிற ஜூலை 17ஆம் தேதி தமிழிலும் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியாகவுள்ளது. கொஞ்சம் கொஞ்சம் தென்னிந்தியாவில் தயாராகும் படங்கள் அனைத்தும் மற்ற மொழிகளில் நேரடியாக வெளியாகி கொண்டிருக்கிறன. குறிப்பாக தெலுங்கு நாயகர்கள் பலரும் தங்கள் மொழியை தாண்டி மற்ற மொழிகளிலும் கவனம் செலுத்த துவங்கியுள்ளன. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

"எ டான்ஸ் பெய் பாரதிராஜா"!! புல்லட் சாங் பாடலுக்கு நடனம் ஆடி க்ரித்தி ஷெட்டிக்கு போட்டிக்கொடுக்கும் பாரதிராஜா!! 1

அந்த வகையில் ராம் இந்த படத்தில் தமிழின் பிரபல இயக்குனர் லிங்குசாமியுடன் இணைந்து படம் நடித்து வருகிறார். இயக்குனர் லிங்குசாமி கடைசியாக இயக்கிய “அஞ்சான்” படம் சூர்யாவின் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்புகள் மத்தியில் வெளியாகி மிக பெரிய தோல்வியை அடைந்தது. அந்த படத்தில் அடைத்த தோல்வியை சரிசெய்து மிக பெரிய வெற்றியை பதிவு செய்ய காத்துள்ளார் லிங்குசாமி.

படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசை அமைத்துள்ளார். ஏற்கனவே வெளியான நடிகர் சிம்பு பாடிய “புல்லட் சாங்” மிக பெரிய வெற்றியை பெற்றது. சிம்புவின் துள்ளலான குரல், சிறப்பான இசை என்பதை தாண்டி நாயகி க்ரித்தி ஷெட்டியின் நடனம் அனைவரையும் கவர்ந்தது. பலரும் இந்த பாடலுக்கு நடனம் ஆடி அதை தங்களுடைய இன்ஸ்டாகிராம் பதிவில் வெளியிட்டு வருகிறார்கள்.

அந்த வகையில் அண்மையில் இயக்குனர் லிங்குசாமியை சந்தித்த இயக்குனர் பாரதிராஜா இந்த பாடலுக்கு ஜாலியாக நடனம் ஆடியுள்ளார். இதனை இயக்குனர் லிங்குசாமி தன்னுடைய ட்விட்டர் பதிவில் பகிர்ந்துள்ளார். 80களின் அறிமுகமாகி மிக பெரிய இயக்குனராக இருந்த பாரதிராஜா தொடர்ந்து பல வெற்றி படங்களை கொடுத்துள்ளார். இவருடைய முதல் படமே மிக பெரிய வெற்றியை பெற்றது குறிப்பிடத்தக்கது. நடிகர்கள் ரஜினி, கமல், ஸ்ரீதேவி நடிப்பில் வெளியான “16 வயதினிலே” படம் இன்றளவும் சிறந்த படமாக கொண்டாடப்படுகிறது.

தொடர்ந்து சிகப்பு ரோஜாக்கள், வேதம் புதிது, முதல் மரியாதை, புதிய வார்ப்புகள், கிழக்கு சீமையிலே போன்ற படங்கள் இன்றளவும் மக்களால் ரசிக்கும் படமாக உள்ளது. இப்பொது படம் இயக்குவதை குறைத்து கொண்டுள்ள இவர், தொடர்ந்து இளம் இயக்குனர்களை ஊக்குவித்து வருகிறார். அந்த வகைஒயில் இந்த ப்ரோமோஷனில் கலந்து கொண்டுள்ளார் நம் பாரதிராஜா.

VideoCourtesy – FilmyHunt

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்