நான் தான் ஹேமா உன்ன பெத்த அப்பா.! ஹேமாவிடம் உண்மைகளை உடைத்த பாரதி.!

வெளியிட்டது

பாரதி கண்ணம்மா தொடரில் தற்போது தான்தான் உன்னுடைய அப்பா என்று ஹேமாவிடம் பாரதி உண்மைகளை போட்டு உடைத்துள்ள வீடியோவை விஜய் டிவி வெளியிட்டு இருக்கிறது. மேலும் கண்ணம்மா தான் நான் தாலி கட்டிய பொண்டாட்டி என்று பாரதியே உண்மையை சொல்லும் ப்ரோமோ தற்போது வெளியாகி இருக்கிறது. இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் ஒரு முக்கியமான தொடர் தான் பாரதி கண்ணம்மா. இந்த தொடர் ஆரம்பத்தில் ஒரு கதையாக ஆரம்பித்து தற்போது எங்கெங்யோ கொண்டு சென்று விட்டனர். தற்போது பாரதிக்கு கண்ணம்மா தான் தனது மனைவி என்றும், கண்ணம்மாவின் இரண்டு குழந்தைகளும் தனக்கு பிறந்தது தான் என்கிற உண்மையும் தெரிந்து விட்டது. பல நாள் கழித்து டிஎன்ஏ டெஸ்ட் எடுத்த பாரதிக்கு இந்த உண்மைகள் அனைத்தும் தெரியவந்துள்ளது. கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்.

நான் தான் ஹேமா உன்ன பெத்த அப்பா.! ஹேமாவிடம் உண்மைகளை உடைத்த பாரதி.! 1
ஆனால் ஒரு பக்கம் ஹேமா தன்னுடைய தந்தை யார் என்று தெரியாமல் தவித்து வருகிறார். இந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஹேமா தனது தந்தை யார் என்று தெரிந்து கொள்ளும் முடிவில் இருக்கிறார். இதற்காக அவர் மருத்துவமனையின் மாடிக்குச் சென்று அங்கிருந்து கீழே விழப்போவதாக அனைவரிடமும் கூறிக் கொண்டிருக்கிறார். அப்போது கரெக்டாக என்ட்ரி கொடுத்த பாரதி, நான் தான் உன்னுடைய அப்பா என்கிற உண்மையை கூறுகிறார். இதனால் ஹேமாவும் கீழே இறங்கி வந்து விடுகிறார். பின்னர் அங்கு வந்த கண்ணம்மாவிடமும் அனைவரிடமும் நான்தான் கண்ணம்மாவிற்கு தாலி கட்டிய புருஷன் என்கிற உண்மையை கூறி விடுகிறார். இதனால் அருகில் இருந்த அனைவரும் அதிர்ச்சியில் உறைகின்றனர்.


மேலும் டிஎன்ஏ டெஸ்ட் எடுத்து பார்த்து விட்டேன் என்றும், ஹேமாவும் லட்சுமியும் என்னுடைய குழந்தைகள் தான் என்றும் அனைவரிடமும் கூறுகிறார். இதனால் வெண்பா அதிர்ச்சியில் உறைந்து போய் நிற்கிறார். கண்ணம்மா, லக்ஷ்மி, ஹேமா என அனைவரும் கதறி அழுகின்றனர். அந்த ப்ரோமோவை நீங்களும் காண..! Watch the below video..!

 

Youtube Video Code Embed Credits: Vijay Television

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்