பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமாகியவர் தனலட்சுமி. இவருக்கு இந்த நிகழ்ச்சியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. இன்ஸ்டாகிராம் மற்றும் டிக் டாக்கில் வீடியோக்களை வெளியிட்டு பிரபலம் ஆகியவர் தான் இவர். இந்த நிகழ்ச்சியில் தனக்கு கிடைத்த வாய்ப்பை தனலட்சுமி சரியாக பயன்படுத்தி கொண்டு அசத்தினார். இந்த நிகழ்ச்சியினால் தற்போது அடுத்தடுத்த கட்டத்திற்கு தனலட்சுமி முன்னேறியுள்ளார்.

நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்த பின்னர் படவாய்ப்புகள் ஏதும் இல்லை என்றாலும், ஆல்பம் பாடல்களில் வாய்ப்பு கிடைத்தது. அதனை சரியாக பயன்படுத்திக்கொண்டு தனக்கான இடத்தைப்பெறுவதற்கு கடின முயற்சி செய்து வருகிறார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளிவந்த பின்னரும் தொடர்ந்து ரீல்ஸ் வீடியோக்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்து உள்ளார்.
பல முன்னணி நடிகர்களை போல நடிப்பதில் தனலக்ஷ்மி வல்லவர். இவர் தற்போது புதியதாக கார் ஒன்றை வாங்கி உள்ளார். அதனை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படமாக பதிவிட்டு இருக்கிறார். இந்த புகைப்படங்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று இருக்கிறது. ரசிகர்கள் அவருக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.