ஜல்லிக்கட்டுக்காக நடைபெற்ற போராட்டத்தில் குரல் கொடுத்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தவர் ஜூலி. இதன்மூலம் இவருக்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் வாய்ப்பு கிடைத்தது. இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டால் தனது வாழ்க்கை மாறிவிடும் என எண்ணி சென்ற அவருக்கு காத்திருந்தது பேரதிர்ச்சி. இந்த நிகழ்ச்சியில் இவருக்கு அதிக நெகட்டிவ் விமர்சனங்கள் எழுந்தது. பலரும் இவரை கடுமையாக விமர்சித்து வந்தனர்.

பின்னர் சிறிது நாட்கள் மீடியா முன்பு வராமல் இருந்த இவர் தற்போது படங்கள் நாடகங்கள் என வாய்ப்பு வரவே நடிக்க தொடங்கி உள்ளார். மேலும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகைகளை மிஞ்சும் அளவுக்கு போட்டோஷூட் எடுத்து பதிவிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். தற்போது சில நாட்களாக இன்ஸ்டாகிராம் பக்கம் வராத ஜூலி தற்போது புதிய வீடியோ ஒன்றை பகிர்ந்து உள்ளார்.
இந்த வீடியோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது. மேலும் பெரும் அதிர்ச்சியையும் ரசிகர்கள் மத்தியில் ஏற்படுத்தி இருக்கிறது. ஜூலி ஆளே மாறிவிட்டதாக ரசிகர்கள் அவரின் வீடியோவுக்கு கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.