Categories: சினிமா

முதல் முறையாக பேத்தியை வீட்டிற்கு வரவேற்ற எம்எஸ் பாஸ்கர்…! வைரலாகும் அழகிய வீடியோ..!

வெளியிட்டது

குணசித்திர நடிகராக தமிழ் சினிமாவில் வலம் வருபவர் எம்எஸ் பாஸ்கர். ஆரம்பத்தில் சின்னபாப்பா பெரிய பாப்பா என்ற தொடரில் நடித்து அறிமுகமாகிய இவர் தனது கடின உழைப்பினால் இன்று சினிமாவில் குணசித்திர நடிகராக உருவெடுத்தார். ஆரம்பத்தில் சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்து வந்த இவர் தற்போது முழு நீள கதாபாத்திரத்தில் நடித்து கலக்கி வருகிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

முதல் முறையாக பேத்தியை வீட்டிற்கு வரவேற்ற எம்எஸ் பாஸ்கர்...! வைரலாகும் அழகிய வீடியோ..! 1

இவரை போல இவரது மகனையும் சினிமாவில் நடிகராக அறிமுகப்படுத்தி உள்ளார். 96 படத்தில் சிறு வயது விஜய் சேதுபதியாக நடித்து கலக்கி இருப்பார். தொடர்ந்து படங்களில் இவரது மகன் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார். மேலும் எம் எஸ் பாஸ்கர் நடிப்பில் அண்மையில் வெளியான பார்க்கிங் படம் மாபெரும் வரவேற்பினை ரசிகர்களிடம் பெற்று உள்ளது.

இந்நிலையில் இவரின் மகள் ஐஸ்வர்யா தற்போது கர்ப்பமாக உள்ளார். அண்மையில் தான் கர்ப்பமாக இருப்பதாக அறிவித்து இருந்தார் ஐஸ்வர்யா. இந்நிலையில் இவருக்கு தற்போது பெண் குழந்தை பிறந்து உள்ளது. தற்போது இவர் தனது பேத்தியை வீட்டிற்கு வரவழைத்து உள்ளார். இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் அவரது மகள் ஐஸ்வர்யா பதிவிட்டு உள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

வெளியிட்டது

புதிய செய்திகள்