தமிழில் ஒளிபரப்பாகி வரும் பிரபல நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சிக்கு என்று மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டமே உள்ளது. பெருமளவு ரசிகர்களை கொண்டு வெற்றிகரமாக இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. இதுவரை 7 சீசன்களை கடந்த நிலையில், தற்போது எட்டாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீசனை விஜய் சேதுபதி தனது ஸ்டைலில் தொகுத்து வழங்கி வருவது நிகழ்ச்சிக்கு கூடுதல் பலமாக அமைந்துள்ளது.

இந்த 8வது சீசனில் போட்டியாளர்களாக தீபக், அர்னவ்,ரஞ்சித், ரவீந்தர் சந்திரசேகர், கானா ஜெப்ரி,விஜே விஷால், நான் முத்துக்குமரன்,சத்யா , அருண் பிரசாத், சௌந்தர்யா நஞ்சுந்தன்,சாச்சனா,அன்ஷிதா, சுனிதா , ஜாக்லின்,ஆர்ஜே ஆனந்தி, பவித்ரா ஜனனி, தர்ஷா குப்தா என 18 பேர் கலந்துகொண்டு உள்ளனர். முதல் ஆளாக ரவீந்தர் எலிமினேட் ஆகியுள்ளார்.இரண்டாவது ஆர்னவ் , மூன்றாவதாக தர்ஷா வெளியேறி உள்ளார்.
நான்காவதாக சுனிதா வெளியேறி உள்ளார். இதனால் சுனிதா ரசிகர்கள் கடும் அதிர்ச்சியில் உள்ளனர். இந்நிலையில் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய சுனிதா முதல் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்,35நாட்கள் என்பது எண்ணற்ற நினைவுகளை கொண்டுள்ளது, அதற்கு நன்றிக்கடனாக இருப்பேன் என கூறி உள்ளார்.