Categories: BiggBoss 8

பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார் தர்ஷா குப்தா..! சோகத்தில் தர்ஷா ரசிகர்கள்..!

வெளியிட்டது

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு என்று தனி ரசிகர்கள் கூட்டமே இருக்கு. இதுவரை தமிழில் 7 சீசன்களை கடந்த இந்த நிகழ்ச்சி 8வது சீசனில் அடியெடுத்து வைத்து உள்ளது. 7 சீசன்களை கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வந்த நிலையில், சில தவிர்க்க முடியாத காரணங்களால் அவர் பிக் பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியேறி உள்ளார். இதனால் தற்போது இந்த நிகழ்ச்சியை விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார். நேற்று ஒளிபரப்பாகிய பிக் பாஸ் தொடக்க நிகழ்ச்சியை விஜய் சேதுபதி அருமையாக தொகுத்து வழங்கி இருப்பதாக பெயர் எடுத்து உள்ளார்.

பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார் தர்ஷா குப்தா..! சோகத்தில் தர்ஷா ரசிகர்கள்..! 1

தற்போது இந்த 8வது சீசனில் போட்டியாளர்களாக தீபக், அர்னவ்,ரஞ்சித், ரவீந்தர் சந்திரசேகர், கானா ஜெப்ரி,விஜே விஷால், நான் முத்துக்குமரன்,சத்யா , அருண் பிரசாத், சௌந்தர்யா நஞ்சுந்தன்,சாச்சனா,அன்ஷிதா, சுனிதா , ஜாக்லின்,ஆர்ஜே ஆனந்தி, பவித்ரா ஜனனி, தர்ஷா குப்தா என 18 பேர் கலந்துகொண்டு உள்ளனர். இதில் முதல் ஆளாக ரவீந்தர் , இரண்டாவதாக அர்னவ் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறி உள்ளார்.

இந்த நிகழ்ச்சியில் இந்த வாரம் ஜாக்லின், அன்ஷிதா, பவித்ரா ஜனனி, சத்யா , முத்துக்குமரன், சௌந்தர்யா மற்றும் அருண் ஆகியோர் நாமினேட் ஆகி உள்ளனர். இதில் இந்த வாரம் குறைந்த வாக்குகளை பெற்று தர்ஷா குப்தா வெளியேறி உள்ளார்.

வெளியிட்டது

புதிய செய்திகள்