பிக்பாஸில் கலந்து கொண்டுள்ள ஏடிகே தற்போது தானே மார்க்கெட்டுக்கு சென்று மீன் வாங்கி, மீன் குழம்பு வைத்திருக்கும் வீடியோவை தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார். பிக்பாஸ் சீசன் சிக்ஸ் நிகழ்ச்சியில் முக்கியமான போட்டியாளராக கலந்து கொண்டவர் பிரபல ராப் பாடகரான ஏடிகே. பிக் பாஸ் வருவதற்கு முன்பு ஏடிகேவை பலருக்கும் தெரியாமல் இருந்தது. தன்முகம் இந்த உலகிற்கு தெரிய வேண்டும் என்கிற காரணத்தினால் பிக்பாஸ்க்கு உள்ளே வந்தார். அவர் வந்த நோக்கம் நிறைவேறியதாகவே தெரிகிறது. பலருக்கும் தற்போது ஏடிகேவை மிகவும் பிடித்துப் போயிருக்கிறது. பிக்பாஸ் வருவதற்கு முன்பே ஏடிகே பல பாடல்களை பாடி இருக்கிறார். ஆனால் இந்த பாடல்களை எல்லாம் இவர்தான் பாடினாரா என்பது பலருக்கும் தெரியாமல் இருந்தது. பிக்பாஸ்க்குப் பின்னர் தற்போது ஏடிகே மிகவும் அறியப்பட்ட ஒருவராக இருக்கிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

பிக்பாஸ் நிகழ்ச்சி முடிவடைய இருக்கும் நூறாவது நாள் நெருங்கும் நிலையில் ஏடிகே குறைந்த வாக்குகள் பெற்று வெளியேற்றப்பட்டார். ஆனால் அதை அவர் சந்தோசமாக ஏற்றுக் கொண்டார். தன்னை இதனால் வரையில் யாருக்கும் தெரியாமல் இருந்தது. இனிமேல் தன்னை பலருக்கும் தெரியும் வாய்ப்பு கிடைத்துவிட்டது, தான் வந்த நோக்கம் நிறைவேறியது என்று சொல்லி பெருந்தன்மையாக பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறினார். தற்போது பாட்டு, கச்சேரிகள், ஆல்பம், பேட்டிகள் என பிசியாக இருக்கும் அவர் இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து ஆக்டிவாக இருந்து வருகிறார் இந்த நிலையில் இன்று அவர் ஒரு வீடியோவை வெளியிட்டு இருக்கிறார். இன்று மார்க்கெட்டிற்கு தானே நேரில் சென்று மீன்களை வாங்கிக் கொண்டு வந்து மீன் குழம்பு வைத்திருக்கிறார். பிக் பாஸ் வீட்டில் இருக்கும் பொழுதே ஒருமுறை ஆண்கள் சமைக்க வேண்டும் என்று அசீம் தலைவராக இருந்த போது ஒரு சட்டம் போடப்பட்டது.
அப்போது ஏடிகே, விக்ரமன் ,கதிரவன் ஆகிய அனைவரும் சேர்ந்து சமைத்து அசத்தியிருந்தனர். அப்போதுதான் ஏடிகே நன்றாக சமைப்பார் என்பது அனைவருக்கும் தெரிய வந்தது. தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் அவர் இன்று தான் மீன் குழம்பு சமைக்கும் வீடியோ ஒன்றை பகிர்ந்து இருக்கிறார். இதை பார்த்த ரசிகர்கள் ஏடிகே உங்களுக்குள்ள இவ்வளவு திறமையா? என்று அவரை பாராட்டி வருகின்றனர். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. நீங்களும் அந்த வீடியோவை காண கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..!
YouTube Video Embed Code Credits: Viral Videos 3.O