பிக்பாஸ் ADK-வின் முன்னாள் மனைவி மற்றும் மகனை பார்த்து இருக்கீங்களா? வெளியான புகைப்படங்கள்.!

வெளியிட்டது

பிக்பாஸில் கலந்து கொண்டுள்ள ஏடிகேவின் முன்னாள் மனைவி மற்றும் அவரது மகனின் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. பிக்பாஸ் தொடங்கி 89 நாட்களை கடந்து விட்டது. கடைசி 8 போட்டியாளர்களில் ஒருவராக இருப்பவர் ஏடிகே.! பல பாடல்கள் பாடியும் இவரது முகம் வெளியில் தெரியவில்லை. எனவே தன்னை அடையாளப் படுத்திக்கொள்ள பிக்பாஸ்ஸுக்கு வந்தார்.

பிக்பாஸ் ADK-வின் முன்னாள் மனைவி மற்றும் மகனை பார்த்து இருக்கீங்களா? வெளியான புகைப்படங்கள்.! 1

இலங்கையை சேர்ந்தவர் ஏடிகே. தற்போது சிங்கப்பூரில் வாழ்ந்து வருகிறார். 2012ம் ஆண்டு வெளியான ஆர்யன் என்ற ஆல்பம் மூலமாக உலகமெங்கும் பேமஸ் ஆனார். பின்னர் தினேஷ் கனகரத்தினம் என்கிற தனது பெயரை ஆர்யன் தினேஷ் கனகரத்தினம் (ADK) என்று மாற்றிக் கொண்டார். முதன் முதலாக ஆத்திச்சூடி பாடலை விஜய் ஆண்டனியின் இசையில் பாடினார். இந்த பாடல் இவருக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது.

முதல் சினிமா பாடலும் அதுவே. பின்னர் பல பாடல்கள் பாடும் அவருக்கு கிடைத்தது. அச்சம் என்பது படத்தில் சோக்காலி பாடல், கடல் படத்தில் மகுடி மகுடி, ரஜினி முருகனில் என்னம்மா இப்படி பண்றிங்களேமா போன்ற பாடல்கள் குறிப்பிடத் தகுந்தவை. சில பாடல்களை தனியாகவும், சில பாடல்களை இணைந்தும் பாடியுள்ளார் ஏடிகே.

தற்போது யுவன், ஹாரிஸ் ஜெயராஜ், சந்தோஸ் நாராயணன், ஏ ஆர் ரகுமான், டி. இமான் ஆகிய பலரின் இசையிலும் தினேஷ் பாடல்களை பாடி வருகிறார். ஆல்பம் பாடல்களிலும் பல ஹிட் பாடல்களை கொடுத்திருக்கிறார். தற்போது பிக்பாஸ் சீசன் 6 போட்டியாளராக கலந்து கொண்டிருக்கிறார். அதில் மற்றொரு போட்டியாளராக இருக்கும் மைனா நந்தினியின் சொந்த மாமா மகனாவார். பல சண்டைகள் மற்றும் சர்ச்சரவு நிறைந்த போட்டியாளராக இருந்த போதும் 89 நாட்களை கடந்து பிக்பாஸ் வீட்டில் விளையாடி வருகிறார் ADK.

ஏடிகே ஜாஸ்மின் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு அபியான் என்ற ஒரு மகன் இருக்கிறார். ஆனால் சில தனிப்பட்ட காரணங்களால் ஏடிகே தனது மனைவியை விவாகரத்து செய்து விட்டார். அபியானுக்கு தற்போது 8 வயது ஆகிறது. தற்போது ஏடிகே வின் முன்னாள் மனைவி மற்றும் குழந்தைகளின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி இருக்கிறது. பலரும் அந்த புகைப்படங்களை ஷேர் செய்து வருகின்றனர். அந்த சிறுவன் பார்ப்பதற்கு அப்படியே ஏடிகே போல் இருப்பதாகவும் அவர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்