பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமாகியவர் அமீர். நடன இயக்குனராக பணியாற்றி வந்த அமீர் தற்போது இயக்குனர் மற்றும் நடிகர் அவதாரம் எடுத்து இருக்கிறார். இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பாவனி ரெட்டியை காதலித்து வருகிறார். மேலும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு சொந்த தயாரிப்பில் புதிய படத்தையும் இயக்க உள்ளதாக அறிவிப்புகளையும் வெளியிட்டு இருந்தார். அதற்கான பூஜையும் நடைபெற்றது.

தற்போதுவரை படம் குறித்து எந்த அப்டேட்டும் இல்லாத நிலையில், இவர் புதியதாக படத்தில் நாயகனாக ஒப்பந்தம் ஆகியுள்ளார். இயக்குனர் முத்தையாவிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய பிடி தினேஷ் இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்க உள்ளார். இப்படத்தின் பூஜையானது தற்போது நடைபெற்று உள்ளது. இந்த புகைப்படங்கள் தற்போது வெளியாகி இருக்கிறது.
இப்படத்தில் இவருடன் இயக்குனர் பேரரசு , காதல் சுகுமார் , சிங்கம்புலி , ஜித்தன் ரமேஷ் ,என பலரும் நடிக்க உள்ளனர். ரசிகர்கள் இப்படம் அமீருக்கு வெற்றிப்படமாக அமைய வேண்டும் என வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.