காதலுடன் செம்ம ரொமான்ஸ் செய்யும் ஆயிஷா.! புகைப்படங்களை வெளியிட்டு காதலை உறுதி செய்த ஆயிஷா

வெளியிட்டது

பிக்பாஸில் கலந்து கொண்டுள்ள ஆயிஷா தற்போது தனது காதலர் யோகேஷை அறிமுகப்படுத்தி இருக்கிறார். காதலர் தின வாழ்த்துக்களுடன், காதலுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை பகிர்ந்து இருக்கிறார் ஆயிஷா. விஜய் தொலைக்காட்சியில் “பொன்மகள் வந்தாள்” என்கிற சீரியல் மூலமாக அறிமுகமானவர் நடிகை ஆயிஷ. இவர் அதற்கு முன்பாக டிக் டாக் செயலியில் வீடியோக்களை வெளியிட்டு வந்தார். பின்னர் இவருக்கு சீரியலில் நடிக்கும் வாய்ப்பு கிடைக்கவே அதை சரியாக பயன்படுத்திக் கொண்டு விஜய் டிவியில் காலடி எடுத்து வைத்தார். ஆனால் சீரியலில் நுழைந்த சில நாட்களிலேயே இயக்குனருக்கும் அவருக்கும் மோதல் ஏற்பட்டது. இதனால் அந்த சீரியலில் இருந்து அதிரடியாக விலகினார் ஆயிஷா. பின்னர் சன் டிவிக்கு சென்ற அவர், அங்கு மாயா என்கிற சீரியலில் நடித்தார். பின்னர் ஜீ தமிழில் ஒளிபரப்பான சத்யா சீரியலில் நடித்து வந்தார். இந்த சீரியல் இவருக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. இதில் ரவுடி பேபி என்கிற கதாபாத்திரத்தில் நடித்து அசத்தினார் ஆயிஷா.

காதலுடன் செம்ம ரொமான்ஸ் செய்யும் ஆயிஷா.! புகைப்படங்களை வெளியிட்டு காதலை உறுதி செய்த ஆயிஷா 1
இந்த சீரியலின் ஹீரோவாக நடிகர் விஷ்ணு நடித்து கொண்டிருந்தார். விஷ்ணுவும் ஆயிஷாவும் காதலித்து வருவதாக பலரும் வதந்திகளை கிளப்பி விட்டிருந்தனர். ஆனால் இந்த தகவலை ஆயிஷா மறுத்தார். மேலும் ஆயிஷா யோகேஸ்வரன் என்பவரை காதலித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகி இருந்தது. சத்யா சீரியல் இரண்டாம் பாகம் முடிந்த கையுடன் அவருக்கு பிக் பாஸ் செல்லும் வாய்ப்பு கிடைத்தது. பிக் பாஸ் சீசன் 6ல் 21 போட்டியாளர்களில் ஒருவராக பங்கேற்று இருந்தார். பிக் பாஸில் இருக்கும்போது அவர் தனது முன்னாள் காதலர் ஒருவரை குத்தி காட்டும் விதமாக பேசியிருந்தார். இதனால் கடுப்பான முன்னாள் காதலர் தேவ், ஆயிஷா குறித்து சில தகவல்களை வெளியிட்டு இருந்தார். ஆயிஷாவிற்கு பதினாறு வயதாக இருக்கும் போதே முதல் திருமணம் நடைபெற்றதாகவும், 18 வயதில் இரண்டாவது திருமணம் நடைபெற்றதாகவும், பின்னர் மூன்றாவதாக தன்னுடன் திருமணம் செய்யாமலேயே தன்னுடன் வசித்து வந்ததாகவும் முன்னாள் காதலர் தேவ் பேட்டிகளில் கூறி வந்தார்.


பின்னர் சத்யா சீரியலில் நடித்துக் கொண்டிருந்தபோது விஷ்ணுவும் அவரும் லிவ்விங் டு கெதர் இருந்தனர் பின்னர் அவர்களுக்குள் மனக்கசப்பு ஏற்பட்டு தற்போது யோகேஷ் என்பவருடன் வாழ்ந்து வருவதாக ஆயிஷாவின் முன்னாள் காதலர் தேவ் பேட்டிகளில் தொடர்ந்து கூறி வந்தார். இது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருந்தது. மேலும் ஆயிஷாவுக்காக கேரளா வரை சென்றதாகவும், ஆயிஷாவின் வீட்டில் தன்னை கட்டி வைத்து அடித்ததாகவும் கண் கலங்கி பேசியிருந்தார். ஆயிஷா தனக்காக வீட்டை விட்டு சென்னைக்கு ஓடி வந்ததால்தான் தான் அவரை காதலித்தேன், ஆனால் இரண்டு திருமணம் நடந்ததை தன்னிடம் மறைத்து விட்டதால் தற்போது நாங்கள் இருவரும் பிரிந்து விட்டோம், ஐந்தாவது ஆக தன்னுடைய தங்கையின் காதலர் யோகேஷ் உடன் அவர் பழகி தற்போது அவரை காதலித்து வருவதாகவும் தேவ் பேட்டி அளித்திருந்தார்.


இந்த சர்ச்சைகள் எல்லாம் ஓய்ந்த நிலையில் நேற்று காதலர் தினம் என்பதால் ஆயிஷா தனது காதலரை அறிமுகப்படுத்தி இருக்கிறார். இவர் தான் தன்னுடைய காதலர் என்று யோகேஸ்வரனை அறிமுகப்படுத்தி இருக்கிறார் ஆயிஷா. அந்த புகைப்படங்களுக்கு லைக்குகளும் குவிந்து வருகிறது. பிக் பாஸில் இருந்த போது விரைவில் திருமணம் என்று கூறி வந்தார் ஆயிஷா. அதனால் அவர் விரைவில் திருமணம் செய்து கொள்வார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்