பிக்பாஸ் நிகழ்ச்சியின் டைட்டில் வின்னராக இருக்கும் அசீம், குழந்தைகளிடம் செய்துள்ள காரியம் ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.பலரும் மீண்டும் அசீமை திட்டி தீர்த்து வருகின்றனர். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பல நாடகங்களில் நடித்து பிரபலமானவர் நடிகர் அசீம். இவர் நடித்த பகல் நிலவு நாடகம் மக்கள் மத்தியில் மிகப் பிரபலமாக இருந்தது .குறுகிய காலத்திலேயே மிகப் பிரபலமாக மாறிய அசீமுக்கு பிக் பாஸில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. இவர் சீசன் 4ல் கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இரண்டு சீசன்கள் கழித்து சீசன் சிக்ஸில் தான் ஒரு போட்டியாளராக கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் அவர் வெற்றியாளராகவும் அறிவிக்கப்பட்டார். இவரின் இந்த வெற்றி பலராலும் விமர்சிக்கப்பட்டது. அதற்கு முக்கிய காரணம் பிக் பாஸ் வீட்டில் சக போட்டியாளரிடம் அசீம் நடந்து கொண்ட விதம் பலருக்கும் அதிர்ச்சியளிக்கும் விதமாக இருந்தது. பெரும்பாலானோர் விக்ரமன் தான் டைட்டில் வெல்வார் என்று எதிர்பார்த்து இருந்த நிலையில் எதிர்பாராத விதமாக அசீம் டைட்டிலைத் தட்டி தூக்கியிருந்தார்.
பிக் பாஸ் வீட்டில் மட்டுமே தான் அவ்வாறு நடந்து கொண்டதாகவும் ஆனால் வெளியில் தான் அப்படி இல்லை என்று மூச்சுக்கு 300 தடவை சொல்லிக் கொண்டிருந்த அசீம் தற்போது மீண்டும் அதே போல் ஒரு செயலை செய்து இருக்கிறார். வெளியில் வந்தும் தொடர்ந்து விமர்சனத்திற்கு உள்ளாகி வருகிறார் அசீம். அவரின் குணம் மாறவே மாறாது என்கிற ரீதியில் பலரும் தற்போது கருத்து தெரிவித்து வருகின்றனர்.

மேலும் மக்கள் நாயகன. என்கிற பட்டத்தை தனக்குத்தானே போட்டுக் கொள்கிறார், செல்லும் இடங்களுக்கு எல்லாம் ஒரே மாதிரியான ஆட்களை அழைத்துச் செல்கிறார், மேலும் கோப்பையை அனைத்து இடங்களுக்கும் எடுத்துச் சென்று போட்டோ எடுத்துக் கொள்கிறார் என்று அசீம் மீது தொடர்ந்து விமர்சனங்கள் எழுந்து வந்தது. சமீபத்தில் சீமானை சந்தித்திருந்த அவர், எங்கு பிறப்பினும் தமிழன் தமிழனே இங்கு பிறப்பினும் அயலான் அயலானே என்கிற வசனத்தை போட்டிருந்தார். அதுவும் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகி இருந்தது. உருது பேசும் இஸ்லாமியர்கள் தமிழர்களே இல்லை என்று சீமான் பேசிய பழைய காணொளிகளை போட்டு அசீமை வறுத்து எடுத்திருந்தனர் நெட்டிசன்கள்.
இந்த நிலையில் தற்போது மலேசியாவிற்கு சென்றிருக்கும் அசின் அங்கு ஒரு கடை திறப்பு விழாவிற்கு சென்றிருக்கிறார். அவருக்கு சிறப்பான வரவேற்பு கொடுக்கப்பட்டது. அப்போது அங்கு இரண்டு சிறுவர்கள் அசீமை வரவேற்பதற்காக பூங்கொத்துடன் நின்று கொண்டிருந்தனர். ஆனால் அதை கண்டும் காணாதது போல் நின்று கொண்டிருந்த அசீம் அந்த சிறுவர்களை புறக்கணித்தது போல் பூக்களையும் வாங்காமல் சென்றிருக்கிறார். இது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
பூங்கொத்துகளை வாங்க வேண்டும் என்பதற்காக அந்த சிறுவர்கள் கைகளை உயர்த்தி உயர்த்தி பூங்கொத்துகளை காண்பித்துக் கொண்டிருக்கின்றனர், மேலும் அசீமை கைகளால் தட்டியும் அழைத்தனர். ஆனால் அதை கண்டும் காணாதது போல் அசீம் அங்கிருந்து சென்று விட்டார். இது தற்போது கடுமையான விமர்சனத்திற்கு உள்ளாகி இருக்கிறது. மக்கள் நாயகன் என்று சொல்லிக் கொள்கிறீர்களே இதுதான் உங்கள் லட்சணமா.? நீங்கள் இன்னும் திருந்தவே இல்லையா என்று நெட்டிசன்கள் கோபத்துடன் கேள்வி எழுப்பி வருகின்றனர்.