10 வருடங்களுக்கு முன்பு இசுலாமிய டிவியில் VJ-வாக பணியாற்றிய அசீம்.! வைரலாகும் வீடியோ இதோ.!

வெளியிட்டது

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற அசீம், ஆரம்பத்தில் ஒரு இஸ்லாம் சார்ந்த மத டிவியில் நிகழ்ச்சி தொகுப்பாளராக வேலை செய்த காணொளி தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. பிக்பாஸ் சீசன் சிக்ஸ் கடந்த அக்டோபர் ஒன்பதாம் தேதி தொடங்கி மிகப் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதன் இறுதி நிகழ்ச்சி கடந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை மாலை ஒளிபரப்பானது. 21 போட்டியாளருடன் ஆரம்பிக்கப்பட்ட இந்த நிகழ்ச்சியில் கடைசியில் மூன்று பேர் தான் பைனலிஸ்ட் ஆக இருந்தார்கள். இதில் அசீம், விக்ரமன், ஷிவின் என மூன்று பேர் இறுதி வரை வந்தார்கள். இதில் அசீம் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார். ஷிவின் மூன்றாவது இடத்தையும், விக்ரமன் இரண்டாவது இடத்தையும் பிடித்திருந்தனர். முதல் இடத்தைப் பிடித்து வெற்றி பெற்ற அசீமிற்கு பரிசுத் தொகையாக 50 லட்சம் ரூபாயும், மேலும் ஒரு காரும் வழங்கப்பட்டது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

10 வருடங்களுக்கு முன்பு இசுலாமிய டிவியில் VJ-வாக பணியாற்றிய அசீம்.! வைரலாகும் வீடியோ இதோ.! 1
பலரும் அசீம் வெற்றி பெறுவார் என்று எதிர்பார்த்து இருக்கவில்லை. ஏனெனில் அவர் இந்த சீசன் தொடங்கிய நாள் முதல் சண்டை, சச்சரவு என அதிரடியாக ஆடி வந்தார் அசீம். சக போட்டியாளர்களை ஒருமையிலும் கோபமாகவும் பேசி வந்தார். இது வெளியில் பிக்பாஸ் பார்த்துக் கொண்டிருந்தவர்களுக்கு சற்று அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இவர் ஜெயிக்க மாட்டார் என்று வீட்டில் இருந்த சக ஹவுஸ்மேட்ஸே கூறிவந்த நிலையில் யாரும் எதிர்பாராத விதமாக அசீம் வெற்றி பெற்றார். இதனால் விஜய் டிவிக்கும் பிக்பாஸுக்கும் எதிராக இணையத்தில் நெட்டிசன்கள் தொடர்ந்து கருத்து தெரிவித்து வருகின்றனர். இப்படி அடுத்தவர்களை இழிவுபடுத்தி ஆடினால் வெற்றி பெற்று விடலாமா என்றும், விஜய் டிவியை புறக்கணியுங்கள் என்று சொல்லி Boycott விஜய் டிவி என்ற ஹேஷ்டேக்கையும் நெட்டிசன்கள் ட்விட்டரில் ட்ரெண்ட் செய்து வந்தனர். மேலும் உண்மையான வின்னர் விக்ரம் தான் என்றும் அவர்கள் கருத்து தெரிவித்து வந்தனர்.


இந்த நிலையில் வெளியே வந்த அசீம் தான் வென்ற ஐம்பது லட்சத்தில் 25 லட்ச ரூபாயை கொரோனா தொற்றால் பெற்றோர்களை இழந்த பிள்ளைகளின் படிப்பு செலவிற்கு வழங்க இருப்பதாக அறிவித்திருந்தார். ஆனாலும் அவரைச் சுற்றி தொடர்ந்து சர்ச்சைகள் ஓயாமலே இருந்து கொண்டு வருகிறது. இந்த நிலையில் தற்போது அசீமின் பழைய வீடியோ ஒன்று இணையத்தில் ட்ரெண்டாக தொடங்கி இருக்கிறது. அதில் அசீம் ஒரு தனியார் இஸ்லாமிய டிவியில் ஆரம்பத்தில் நிகழ்ச்சி தொகுப்பாளராக வேலை பார்த்து வந்தார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகத் தொடங்கி இருக்கிறது. நீங்களும் அந்த வீடியோவை காண கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..!

 

YouTube Video Embed Code Credits: Moon Tv

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்