கோமாளி, சைக்கோ திரும்ப வந்துட்டான்.! அசீம் பற்றி ட்விட்டரில் வச்சி செய்யும் நெட்டிசன்கள்.!

வெளியிட்டது

சோற்றில் எச்சில் துப்பி கொடுப்பேன் அந்த சோற்றை நீ சாப்பிட வேண்டும் என்று விக்ரமனிடம் அசீம் பேசும் காணொளி இன்று காலை முதலே வைரலாகி வந்தது. அந்த ப்ரோமோவை விஜய் டிவியை வெளியிட்டு இருந்தது. தற்போது லைவ்வில் நடந்த சண்டை அசீமின் மோசமான குணத்தை வெளிப்படுத்தி இருக்கிறது. இதனால் நெட்டிசன்கள் அவரை வறுத்து எடுத்து வருகின்றனர். ட்விட்டரில் அவர் குறித்த மீம்ஸ்கள் பறந்து வருகின்றது. விஜய் டிவியில் ஒளிபரப்பான பகல் நிலவு என்கிற சீரியல் மூலமாக பிரபலமானவர் நடிகர் அசீம். இவர் பின்னர் விஜய் டிவி, ஜீ தமிழ், சன் தொலைக்காட்சி ஆகிய டிவிகளில் தொடர்களில் நடித்து வந்தார். இந்த நிலையில் அவர் பிக்பாஸில் கலந்து கொள்ளப் போகிறார் என்று தொடர்ந்து வதந்திகள் பரவி வந்த நிலையில் இந்த சீசனில் அவர் ஒரு போட்டியாளராக கலந்து கொண்டார்.

கோமாளி, சைக்கோ திரும்ப வந்துட்டான்.! அசீம் பற்றி ட்விட்டரில் வச்சி செய்யும் நெட்டிசன்கள்.! 1

இவர் கலந்து கொண்ட நாள் முதலே ஏதாவது ஒரு பிரச்சனையை கிளப்பி வந்தார். முதன்முறையாக ஆயிஷாவை வாடி போடி என்று தரக்குறைவாக பேசினார். பின்னர் அமுதவாணனை ஒருமையில் பேசினார். அதன் பின்னர் விக்ரமன், தனலட்சுமி என்று இவரின் அட்ராசிட்டி நீண்டு கொண்டே இருந்தது. இதை வெளியில் இருந்த மக்கள் ரசிக்கவில்லை. இவருக்கு எதிராக தொடர்ந்து கருத்து தெரிவித்து வந்தனர். இதனால் கமலஹாசனே அசீமை கண்டித்தார். அடுத்தமுறை இது போல் செய்தீர்கள் என்றால் உங்களுக்கு ரெட் கார்டு கொடுக்க கூட தயங்க மாட்டேன் என்று கமல் பேசியிருந்தார். அதனால் ஒரு வாரம் அமைதியாக இருந்து வந்த அசீம் தற்போது மீண்டும் வேதாளம் முருங்கை மரம் ஏறியது போல் ஏறி இருக்கிறார்.

இன்று நடந்த ராஜா ராணி மியூசியம் டாஸ்கில் அசீம் படைத்தளபதி ஆகவும் விக்ரமன் அரசு ஆலோசகராகவும் இருக்கிறார். இதில் ஷிவின், ராணியாக இருக்கும் ரட்சிதாவிற்கு சோற்றில் உப்பை கலந்து கொடுக்கிறார். இதை கவனிக்கத் தவறிய படைத்தளபதிக்கு தண்டனை வழங்க வேண்டும் என்று ஷிவின் பேசிக் கொண்டிருக்க அதை விக்ரமனும் ஆமோதிக்கிறார். இதனால் சண்டை பெரிதானது. விக்ரமனை நீ சாப்பிடும் சோற்றில் எச்சில் தொப்பி கொடுப்பேன் அதை நீ சாப்பிட வேண்டும் என்று அநாகரிகமாக பேசினார் அசீம். இதனால் கோபமான விக்ரமன் கத்த தொடங்கினார் அசீமுக்கு எதிராக தனலட்சுமி, ஆயிஷா, ஏடிகே ஷிவின், மைனா என்று அனைவரும் ஒன்று திரண்டனர். சண்டை மிகப் பெரிதானது. தொடர்ந்து விளையாட மாட்டேன் என்று அறையில் படுத்து கொண்டிருக்கிறார் அசிம்.

இந்த நிலையில் இந்த ப்ரோமோக்களை பார்த்த நெட்டிசன்கள் அசீமை வச்சு செய்து வருகின்றனர். மீண்டும் தான் ஒரு கோமாளி என்பதை அசீம் நிரூபித்து விட்டதாக அவர்கள் மீம்ஸ்களை போட்டு வறுத்து எடுத்து வருகின்றனர்.

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்