“இந்த வாரம் எலிமினேஷன் கிடையாது” அதிரடியாக அறிவித்த விஜய் டிவி.! என்ன காரணம் தெரியுமா?

வெளியிட்டது

சென்னையில் ‘மிக்ஜாம்’ புயலால் பெரும்பான்மையான மக்கள் வாக்களிக்காததால் இந்த வார எலிமினேஷன் ரத்து செய்யப்படுவதாக விஜய் டிவி அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி 65 நாட்களை முடித்து 66-வது நாளில் அடி எடுத்து வைத்துள்ளது. நேற்று ‘பொம்மலாட்டம்’ என்கிற டாஸ்க்கும், இன்று ‘கல்லூரிக் காலம்’ என்கிற டாஸ்க்கும் வைக்கப்பட்டு நடந்து வருகிறது. இதில் நிக்ஸன் அர்ச்சனாவிடம் தொடர்ந்து சண்டை போட்டுக் கொண்டிருக்கிறார். அர்ச்சனாவை தனிப்பட்ட முறையில் தாக்கியும், அர்ச்சனா கூட்டு சேர்ந்து கொண்டு மற்றவர்களை தரம் தாழ்த்துவதாகவும் நிக்ஸன் கன்டென்டுக்காக சண்டை போட்டுக் கொண்டிருக்கிறார்.

"இந்த வாரம் எலிமினேஷன் கிடையாது" அதிரடியாக அறிவித்த விஜய் டிவி.! என்ன காரணம் தெரியுமா? 1
நிலைமை இப்படியாக இருக்க, இந்த வாரம் ஐந்து பேர் மட்டுமே நாமினேஷனில் சிக்கி இருந்தனர். குறிப்பாக ஸ்மால் பாஸ் வீட்டிலிருந்து நிக்ஸன் மட்டும் தேர்வான நிலையில், பிக் பாஸ் வீட்டில் இருந்து மணி, அர்ச்சனா, தினேஷ், விசித்ரா என நான்கு பேரும் தேர்வாகியிருந்தனர். இந்த நிலையில் இந்த வாரம் மணி அல்லது நிக்ஸன் இருவரில் ஒருவர்தான் வெளியேறுவார்கள் என்று ரசிகர்கள் எதிர்பார்த்திருந்தனர். நமது இணையதளத்தில் எடுக்கப்படும் அதிகாரப்பூர்வமற்ற வாக்கெடுப்பிலும் நிக்ஸன் மற்றும் மணி இருவருமே பின்தங்கி இருந்தனர். குறிப்பாக நிக்ஸன் ஆரம்பம் முதலே கடைசி இடத்தை பிடித்து வந்தார்.இதனால் இந்த வாரம் நிக்ஸன் இந்த வீட்டிலிருந்து வெளியேறுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் சென்னையில் கடந்த மூன்று நாட்களாக ‘மிக்ஜாம்’ புயல் கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. பல இடங்களில் வெள்ள சேதங்கள் ஏற்பட்டிருக்கிறது. பல இடங்களில் மின்தடை, இணைய சேவை தடை இருப்பதால் பலராலும் மொபைல் போனை பயன்படுத்த இயலவில்லை. எனவே இந்த வார வாக்கெடுப்பு மிகவும் சுணக்கமாக சென்று கொண்டிருந்தது. பெரும்பான்மையான மக்களால் வாக்களிக்க முடியவில்லை என்று கூறப்படுகிறது. அதனால் விஜய் டிவி தற்போது ஒரு அதிரடி முடிவை எடுத்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில், “மிக்ஜாம் புயலின் காரணமாக பெரும்பான்மையான மக்கள் வாக்களிக்க முடியாததால் இந்த வார எலிமினேஷன் ரத்து செய்யப்படுகிறது” என அறிவிக்கப்பட்டுள்ளது.

பலரும் கண்டன்ட்டே கொடுக்காத மணி வெளியேற வேண்டும் என்று விரும்பிய நிலையில், பலர் நிக்ஸன் வெளியேற வேண்டும் என்று கூறி வந்தனர். இந்த நிலையில் இரண்டு பேருமே புயல், மழை, வெள்ளம் காரணமாக இந்த வார எலிமினேஷனில் இருந்து தப்பித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்