கண்ணுல ஒரு சொட்டு தண்ணி வரல.! ஆஸ்கர் குடுங்கடா.! ஜனனியை கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்

வெளியிட்டது

பிக்பாஸ் ப்ரோமோ வெளியான பின்பு ஜனனி மற்றும் அமுதவாணனை நெட்டிசன்கள் திட்டி தீர்த்து வருகின்றனர். இன்று வெளியான பிக்பாஸ் ப்ரோமோவில் ஒர்ஸ்ட் பர்ஃபாமராக ஜனனி தேர்வு செய்யப்பட்டார். குறிப்பாக விக்ரமன் ஜனனி அமுதவாணனை மட்டுமே சார்ந்து விளையாடுகிறார் என்ற குற்றச்சாட்டை முன்வைத்து ஜனனியை குறைவான பங்கேற்றவர் என்று பேசிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென உள்ளே புகுந்த அமுதவாணன், ஜனனி அப்படி ஒன்றும் இல்லை என்று விளக்கம் கொடுக்க ஆரம்பித்தார். இதனால் வாக்குவாதம் முற்றியது. இதனால் கடுப்பான ஜனனி தலையணையை அமுதவாணன் மீது எறிந்து நீ எதற்கு எதற்கெடுத்தாலும் எனக்காக வாக்குவாதம் செய்கிறாய் என்று கோபப்பட்டார். இந்த ப்ரோமோ வெளியான பின்பு பலரும் ஜனனியையும் அமுதவாணையையும் ட்ரோல்ஸ் செய்து வருகின்றனர்.

கண்ணுல ஒரு சொட்டு தண்ணி வரல.! ஆஸ்கர் குடுங்கடா.! ஜனனியை கழுவி ஊற்றும் நெட்டிசன்கள் 1

இந்த சீசன் ஆரம்பமானது முதலே அமுதவாணன், ஜனனி, தனலட்சுமி ராபர்ட் மாஸ்டர், ரட்சிதா ஆகியோர் ஓர் அணியாக செயல்பட்டு வருகின்றனர். இவர்கள் எப்பொழுதும் அமர்ந்து கொண்டு பேசுவது, விளையாட்டில் குழுவாக செயல்படுவது என்று தனித்துவம் இல்லாமலே இருந்து வருகின்றனர். இதை இணையத்தில் பலரும் சுட்டிக்காட்டி இருந்த போதிலும் வீட்டில் உள்ள யாரும் அதை குறையாக கூறவில்லை.

ஆனால் பார்ப்பவர்களுக்கு இது சற்று எரிச்சலை ஏற்படுத்தி இருக்கிறது மறுக்க முடியாத உண்மை. தனித்துவம் இல்லாமல் ஒரு அணியாக செயல்பட்டு கொண்டே மற்ற டீமை எதிர்ப்பது தான் இந்த கேமா என்று பலரும் கேள்வி எழுப்பி வந்தனர். மேலும் அமுதவாணன் ஜனனியை விட்டு விலகி இருந்தாலே, அவர் தனது விளையாட்டை நன்றாக விளையாடுவார் என்றும் தங்களது கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.

இன்று வெளியான ப்ரோமோவுக்கு பிறகு இந்த கருத்து மேலும் வலுப்படுத்தப்பட்டுள்ளது. அமுதவாணனை பலரும் திட்டி ட்விட்டரில் பதிவுகளை போட்டு வருகின்றனர். மேலும் அமுதவாணன் ஜனனியை விட்டு விலக வேண்டும் என்றும் அவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். ஜனனி இப்போது நடத்தியது டிராமா என்றும், இவரது நடிப்பிற்கு ஆஸ்கரை கொடுக்கலாம் என்றும் தங்களது கருத்துக்களை பதிவுகளாக செய்து வருகின்றனர் நெட்டிசன்கள்.

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்