கியூட்டான ஸ்மைல போட்டு சாச்சிட்டாளே.! குத்து பாடலுக்கு செம்ம Cute ஆக ஆடிய ஜனனி..!

வெளியிட்டது

இலங்கையில் இருந்து வந்து பல இளைஞர்களின் உள்ளத்தை கவர்ந்த ஜனனி தற்போது புது வீடியோ ஒன்றை பகிர்ந்து இருக்கிறார். அதில் மச்சான் மீசை வீச்சருவா பாடலுக்கு செம க்யூட்டாக நடனமாடி இருக்கிறார். அந்த வீடியோவிற்கு லைக்குகள் குவிந்து வருகிறது. இலங்கையில் இருக்கும் பிரபல தனியார் தொலைக்காட்சி ஒன்றில் செய்தி வாசிப்பாளராகவும் நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் இருந்து வந்தவர் ஜனனி. இவர் இலங்கையில் இருக்கும் பிரபல உணவகங்களுக்கு நேரில் சென்று அங்கு சமைக்கப்படும் உணவுகளை ருசி பார்த்து அதன் தரத்தை பற்றி ரிவிவ்யூ சொல்லும் நிகழ்ச்சிகளையும் நடத்தி வந்தார். மேலும் டிக் டாக் செயலியில் வீடியோக்களை தொடர்ந்து வெளியிட்டு பல இளைஞர்களின் மனதை கொள்ளை அடித்திருந்தார் ஜனனி. இதனால் அவருக்கு தமிழில் மிகப் பெரிய நிகழ்ச்சியாக இருக்கும் பிக்பாஸில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

கியூட்டான ஸ்மைல போட்டு சாச்சிட்டாளே.! குத்து பாடலுக்கு செம்ம Cute ஆக ஆடிய ஜனனி..! 1
பிக் பாஸ் சீசன் சிக்ஸ் நிகழ்ச்சிக்காக சென்னை வந்த ஜனனி இந்த நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றார். ஆரம்பத்திலேயே ஜனனி வயது குறைந்தவர் என்ற ரீதியில் அவரை மற்ற போட்டியளார்கள் காட்ட முயற்சி செய்தபோது தான் வயது குறைந்தவர்வில்லை தனக்கும் பக்குவம் இருக்கிறது என்று எல்லா இடத்திலும் தைரியமாக பேசி தனது செல்வாக்கை நிரூபித்து இருந்தார். இதனால் பலருக்கும் ஜனனியின் துணிச்சல் மிகவும் பிடித்துப் போனது. பின்னர் நாட்கள் செல்ல செல்ல ஜனனி நண்பர்களுடன் சேர்ந்து கொண்டு குழுவாக விளையாடத் தொடங்கினார். தான் ஜெயிக்க வேண்டும் என்கிற எண்ணத்தை மறந்து தன் நண்பர்கள் ஜெயிக்க வேண்டும் என்று விளையாடத் தொடங்கினார் ஜனனி. இதனால் ஜனனியை குறைந்த வாக்குகள் அளித்து மக்கள் வெளியேற்றி இருந்தனர். இது இலங்கை மக்களுக்கு செய்யும் துரோகம் என்று ஜனனியின் ரசிகர்கள் விஜய் டிவிக்கு எதிராக கண்டன குரல்களையும் எழுப்பி வந்தனர்.

 

பிக்பாஸில் இருந்து வெளியே வந்த ஜனனி அதைப்பற்றி எல்லாம் கவலைப்படாமல் தொடர்ந்து இயங்கிக் கொண்டே இருக்கிறார். மேலும் அவருக்கு தளபதியின் 67 படத்தில் நடிக்கும் வாய்ப்பும் கிடைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் ஜனனி ஏதாவது ஒரு வீடியோ ஒன்றை வெளியிடுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார். அந்த வகையில் அவர் இன்று ஒரு வீடியோவை பகிர்ந்து இருக்கிறார். அதில் மச்சான் மீசை வீச்சருவா என்கிற பாடலுக்கு செம க்யூட்டாக நடனமாடி இருக்கிறார். பலரும் அந்த வீடியோவை பகிர்ந்து வருகின்றனர். நீங்களும் அந்த வீடியோவை காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..!

 

YouTube Video Embed Code Credits: Viral Videos 3.O

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்