பிக்பாஸ் ஜனனி தற்போது தனது தங்தையுடன் இருக்கும் புகைப்படங்களை முதன்முறையாக பகிர்ந்து இருக்கிறார். அந்த படத்தை பார்த்த பலரும் அப்படியே ஜனனி போல் இருப்பதாக கமெண்ட் செய்து வருகின்றனர். பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் முக்கியமான போட்டியாளராக இருந்தவர் ஜனனி குணசீலன். இவர் இலங்கையில் இருக்கும் பிரபல தனியார் தொலைக்காட்சி ஒன்றில் நிகழ்ச்சி தொகுப்பாளராகவும், செய்தி வாசிப்பாளராகவும் இருந்து வந்தார். மேலும் இலங்கையில் இருக்கும் பிரபல உணவகங்களுக்குச் சென்று அங்கு சமைக்கப்படும் உணவுகளை ருசி பார்த்து அதை ரிவ்யூ சொல்லும் நிகழ்ச்சியையும் இவர் தொகுத்து வழங்கி வந்தார். இந்த நிலையில் டிக் டாக் செயலியில் அவரது வீடியோக்கள் வைரலாக தொடங்கியது. பலரும் ஜனனியின் வீடியோக்களை பகிரத் தொடங்கினர். குறுகிய காலத்திலேயே பிரபலமான ஜனனிக்கு பிக்பாஸில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. அதை சரியாகப் பயன்படுத்திக் கொண்டு பிக்பாஸில் கலந்து கொண்டார்.

ஜனனிக்கு ஆரம்பம் முதலே தமிழ்நாட்டு மக்கள் மற்றும் இலங்கை மக்களிடையே அதிகப்படியான ஆதரவு இருந்து வந்தது. வயது குறைவாக இருந்த போதிலும் தைரியமாக தனது கருத்தை முன் வைப்பதிலும், யாருக்கும் பயப்படாமல் தனது கருத்துக்களை முகத்திற்கு நேராக சொல்வதினால் ஜனனியை பலரும் விரும்பினர். சுமார் 70 நாட்கள் ஜனனி அந்த வீட்டில் தாக்கு பிடித்தார். பின்னர் ஒரு கட்டத்தில் அவருக்கு குறைவான வாக்குகளை அளித்து மக்கள் வெளியேற்றி இருந்தனர். அதற்கு முக்கிய காரணமாக சொல்லப்பட்டது தொடக்கத்தில் தனியாக விளையாடி வந்த ஜனனி பின்னர் அமுதவாணன் மற்றும் தனலட்சுமி உடன் இணைந்து குழுவாக மாறிக்கொண்டு அவர்களுடனே நேரத்தை செலவிட்டு வந்தார். இது பலருக்கும் அதிருப்தியை கொடுத்த நிலையில் ஜனனியை குறைவான வாக்குகளை அளித்து வெளியேற்றினர். வெளியேறிய பின்னர் ஜனனி சில படங்களில் கமிட்டாகியும் இருக்கிறார். குறிப்பாக தளபதி 67 படத்தில் அவர் நடித்து வருகிறார் என்று கூறப்படுகிறது.
ஜனனியின் குடும்பம் பெற்றோர்கள் அவரது தனிப்பட்ட வாழ்க்கை என்று எதுவுமே பெரிய அளவில் தெரியாத இருக்கும் நிலையில் தற்போது அவரது தங்கையுடன் இருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார். அந்த புகைப்படங்களுக்கு லைக்குகள் குவிந்து வருகிறது. பிக்பாஸில் இருந்து வெளியே வந்தபோது நேராக இலங்கைக்குச் சென்ற ஜனனி தனது தங்கையை சந்தித்து புகைப்படம் எடுத்துள்ளார். ஜனனியின் தங்கை நன்றாக வளர்ந்து ஜனனி போலவே தோற்றமளிக்கிறார். அந்த புகைப்படங்களுக்கு தற்போது லைக்குகள் குவிந்து வருகிறது. பலரும் பார்ப்பதற்கு அப்படியே ஜனனி போல இருக்கிறீர்கள் என்று சொல்லி கமெண்ட் செய்து வருகின்றனர்.