விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் பிரபல நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சிக்கு என்று மிகப்பெரிய அளவு ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது. இதுவரை ஏழு சீசன்கள் முடிவடைந்து இருக்கும் நிலையில் 8வது சீசன் விரைவில் தொடங்க இருக்கிறது. இதுவரை அனைத்து சீசன்களையும் நடிகர் கமல் தொகுத்து வந்த நிலையில், அவர் நிகழ்ச்சியை விட்டு வெளியேறி உள்ளார்.

படத்திற்கான வேலைகள் இருப்பதாகவும் , இதனால் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள முடியாது என கூறி உள்ளார். இது ரசிகர்களிடம் மிகப்பெரிய சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. தற்போது இந்த நிகழ்ச்சியை அடுத்து தொகுத்து வழங்குவது யார் என்ற பெரிய எதிர்பார்ப்பு தற்போது உருவாகி இருக்கிறது. இந்த நிகழ்ச்சியை அடுத்ததாக சரத்குமார் தொகுத்து வழங்குவார் என இணையத்தில் கூறப்பட்டு வருகிறது.
இருந்தாலும் நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்க அதிக வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இது அதிகாரபூர்வ தகவல் இல்லை என்றாலும் விரைவில் யார் தொகுத்து வழங்குவார் என்ற அறிவிப்பை படக்குழு வெளியிடும் என பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.