திரைத்துறையில் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மாடலிங் துறையில் உள்ளவர்களுக்கு ஷார்ட் ரூட்டாக உள்ளது பிக்பாஸ் நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சியில் பங்கு பெறும் பலரும் அடுத்தடுத்து பட வாய்ப்பு பெற்று வருகின்றனர். பட வாய்ப்புகள் கிடைக்காதவர்கள் சின்ன திரையிலும் அல்லது ஏதாவது ஒரு நிகழ்ச்சியிலும் பங்கெடுத்து பிரபலமாகி வருகின்றனர். பட வாய்ப்புகள் கிடைக்காதவர்களையும், அல்லது முன்னாள் படங்களில் நடித்து தற்போது மார்க்கெட் குறைந்த நடிகர்களையும் அழைத்து வந்து நடத்தப்படுவது தான் பிக்பாஸ் நிகழ்ச்சி. பிக்பாஸ்க்கு பின்னர் நிறைய பேர் தன்னுடைய திரை வாழ்க்கையை தொடங்கி இருக்கின்றனர் எடுத்துக்காட்டாக தர்ஷன், கவின், முகின், லாஸ்லியா, வனிதா, யாஷிகா போன்ற பலர் பிக்பாஸ்க்கு பின்னர் பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகின்றனர்.

அந்த வகையில் பிக்பாஸ் சீசன் 5 வில் கலந்துகொண்டு புகழ்பெற்றவர் தான் நிரூப். மாடலிங் துறையைச் சேர்ந்த இவர் யாஷிகாவின் முன்னாள் காதலரும் கூட. இவர் தற்போது வானவில் என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அவதாரம் எடுத்துள்ளார். அந்த படம் குறித்த தகவல்கள் தற்போது வெளியாகியிருக்கிறது. இந்தப் படத்தின் பெயர் ‘ரெயின்போ’. இந்த படத்தை வசந்த் ராமசாமியின் ஸ்ரீ அன்னமார் ப்ரொடக்ஷன்ஸ் மற்றும் இயக்குனர் எஸ் பி ஹோசிமினின், ஹோசிமின் ப்ரொடக்ஷன்ஸ் இணைந்து இந்த படத்தை தயாரிக்கின்றனர். இந்த படத்தின் பட பூஜை இன்று சென்னையில் துவங்கியது.
இயக்குனர் சங்கரிடம் உதவி இயக்குனராக இருந்த ஹோசிமின் இரண்டு படங்களை இயக்கியிருக்கிறார். பரத் நடிப்பில் வெளியான பிப்ரவரி 14 மற்றும் சாந்தனு பாக்யராஜ், சத்யராஜ் நடிப்பில் வெளியான ஆயிரம் விளக்கு போன்ற படங்களை இயக்கியவர். மேலும் மிர்ச்சி சிவா, பிரியா ஆனந்த், யோகி பாபு, விடிவி கணேஷ் நடித்துள்ள வேல்ஸ் இன்டர்நேஷனல் தயாரித்துள்ள ‘சுமோ’ படம் விரைவில் வெளியாக உள்ளது. இதற்கிடையில் பிக்பாஸ் புகழ் நிரூப்பை கதாநாயகனாக வைத்து இந்த படத்தை அவர் இயக்கி உள்ளதாக தெரிகிறது. இதில் ஏழு கதாநாயகிகள் நடிக்கின்றனர். பிரம்மாண்ட பொருட்ச் செலவில் பேண்டஸி காமெடி திரைப்படமாக இந்த படம் உருவாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
Youtube Video Code Embed Credits: Niroop Galatta