பிக்பாஸ் சீசன் 6ல் இந்த வாரம் நிவாஷினி வெளியேறி இருக்கிறார். வார இறுதி நாட்களில் ஓட்டு எண்ணிக்கையில் பின் தங்கியிருக்கும் போட்டியாளரை பிக்பாஸ் வெளியேற்றி விடுவது வழக்கமாக இருக்கிறது. அதன்படி இந்த வாரம் நிவாஷினிக்கு மிகக்குறைவான ஓட்டுகளே கிடைத்துள்ளன. இதில் நிவாஷினி தற்போது அதிகாரபூர்வமாக வெளியேறி இருக்கிறார். அக்டோபர் ஒன்பதாம் தேதி 21 போட்டியாளர்களுடன் கோலாகலமாக ஆரம்பிக்கப்பட்டது பிக்பாஸ் சீசன் 6. எப்பொழுதும் 16 போட்டியாளர்கள் அல்லது 18 போட்டியாளர்களைக் கொண்டு தொடங்கும் இந்த நிகழ்ச்சியை, முதல் முறையாக 21 பேரைக் கொண்டு ஆரம்பித்தனர். வழக்கம் போல கமலஹாசனே இந்த சீசனையும் தொகுத்து வழங்கி வருகிறார்.

பிக்பாஸ் தொடங்கிய முதல் வாரம் எலிமினேஷன் இருக்காது. எனவே இரண்டாவது வாரத்தில் இருந்து தான் எலிமினேஷன் செய்ய தொடங்குவார்கள். இரண்டாவது வாரம் ஜி.பி முத்து தனக்கு மன அழுத்தம் இருப்பதாக கூறி வெளியேறிவிட்டார். அந்த வாரமே நடன இயக்குனர் சாந்தியையும் எலிமினேட் செய்து அனுப்பிவிட்டனர். மூன்றாவது வாரத்தில் அசல் கோளாறும், நான்காவது வாரத்தில் ஷெரினாவும், ஐந்தாவது வாரம் மகேஸ்வரியும் வெளியேறி இருக்கின்றனர். இந்த நிலையில் இந்த வாரம் வாக்கெடுப்பு தொடங்கிய ஆரம்பம் முதலே ஆயிஷா கடைசி இடத்தில் இருந்து வந்தார். ஆனால் திடீர் திருப்பமாக ஆயிஷாவுக்கு வாக்குகள் அதிகமாக தொடங்கியது. கடைசி இடத்தில் நிவாஷினி இருந்து வந்தார்.
அசல் கோளாறு இருந்தவரை கொஞ்சமாவது திரையில் தெரிந்த நிவா அவர் சென்ற பின்பு சுத்தமாக திரையில் தெரிவதே இல்லை. அவர் வீட்டில் இருக்கிறாரா என்பதே பார்க்கும் ரசிகர்களுக்கு தெரியவில்லை. வீட்டில் இருந்து மாயமானது போல இருக்கிறார். கன்டென்ட் கொடுக்காமல் சும்மா உக்காந்து மிக்ஸர் சாப்டிட்டு கொண்டிருக்கும் நிவா, இந்த முறை வெளியேற அதிக வாய்ப்புகள் இருப்பதாக தெரிகிறது. நமது இணையதளத்தில் எடுக்கப்பட்ட வாக்கு எண்ணிக்கை முடிவிலும் நிவா குறைந்த வாக்குகள் பெற்று இருந்தார். எனவே இந்த வாரம் நிவா வெளியே சென்று இருக்கிறார்.