Categories: Bigg Boss Tamil 6

விக்ரமனை பின்னுக்கு தள்ளி முதலிடம் பிடித்த அசீம்.! பரபரக்கும் Voting முடிவுகள்.!

வெளியிட்டது

பிக்பாஸ் சீசன் 6ல் பல திருப்பங்கள் நடந்து வருகிறது. இந்த சீசனில் ஆரம்பத்தில் அதிரடியாக விளையாடிக் கொண்டிருந்த அசீம் வெளியேற வேண்டும் என்று பலரும் கோரிக்கை விடுத்து வந்த நிலையில், தற்போது நிலைமை தலை கீழாக மாறியிருக்கிறது. அசீம் இந்த வார ஓட்டிங்கில் முதலிடத்தில் இருக்கிறார். கடந்த மாதம் ஒன்பதாம் தேதி தொடங்கி மிக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பிக பாஸ் சீசன் சிக்ஸ் இந்த நிகழ்ச்சியில் ஆரம்பத்தில் 21 நபர்கள் பங்கு எடுத்துக் கொண்டார்கள். நான்கு பேர் வெளியேறிய நிலையில் தற்போது 17 போட்டியாளர்களுடன் இந்த நிகழ்ச்சி தொடர்ந்து வருகிறது. இந்த வாரம் வாக்கெடுப்பில் ராம் ராமசாமியும், மகேஸ்வரியும் கடைசி இடத்தை பிடித்திருந்தனர். இதில் யார் வெளியேறப் போகிறார்கள் என்ற கேள்வியை மக்களிடையே எழுந்திருந்தது.

விக்ரமனை பின்னுக்கு தள்ளி முதலிடம் பிடித்த அசீம்.! பரபரக்கும் Voting முடிவுகள்.! 1

 

மகேஸ்வரி தொடர்ந்து சண்டை வம்பு என்று வீட்டை பரபரப்பாக வைத்திருப்பதால் மகேஸ்வரி வெளியேற அதிக வாய்ப்புகள் இல்லை என்று தெரிகிறது. கடந்த இரண்டு வாரமாக கண் வலி என்று சொல்லிக்கொண்டு தூங்கிக் கொண்டே இருந்த ராம் ராமசாமி இந்த வாரம் வெளியே செல்ல அதிக வாய்ப்புகள் இருப்பதாக தெரிகிறது. மேலும் இந்த வார நாமினேஷனில் அசீம், விக்ரமன், ஏடிகே, தனலட்சுமி, ஆயிஷா, ராம் ராமசாமி, மகேஸ்வரி ஆகியோர் இருந்தனர். இதில் முதல் இரண்டு இடங்களில் அசீம் மற்றும் விக்ரமன் ஆகியோர் பிடித்திருக்கின்றனர். முதல் இரண்டு வாரங்களாக சக போட்டியாளர்களை ஒருமையில் பேசியும் உடல் மொழி காட்டிலும் அசிங்கப்படுத்தி வந்தார் அசீம்.

இதனால் கமலஹாசனே கடுப்பாகி அசீமை கண்டித்தார். மேலும் உங்கள் பையன் உங்களை பார்த்துக் கொண்டிருக்கிறார் ஒழுங்காக விளையாடுங்கள் இல்லை என்றால் ரெட் கார்டு கொடுத்து விடுவேன் என்றும் மிக கடுமையாக கண்டித்தார். அதன் பின்னர் தனது போக்கை மாற்றிக் கொண்ட அசீம் சிறப்பாக விளையாடி வருகிறார். இந்த வாரம் யாரும் எதிர்பார்க்காத விதமாக அசீம் முதல் இடத்தை பிடித்திருக்கிறார். கடந்த வாரம் விக்ரமன் முதலிடத்திலும் அசீம் இரண்டாம் இடத்திலும் இருந்தனர். இந்த வாரம் விக்ரமனை பின்னுக்குத் தள்ளி, அசீம் முதல் இடத்தை பிடித்திருக்கிறார். அதற்கு முக்கிய காரணம் அவர் தனது கோபத்தை கட்டுப்படுத்திக் கொண்டும், வார்த்தைகளை கவனமாக கையாண்டதும் தான். இப்படியே போனால் இறுதிவரை விக்ரமனும் அசீமும் கடைசி போட்டி ஐந்து போட்டியாளர்களில் இருவராக வருவார்கள் என்று அவரது ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்