கனா காணும் காலங்கள் நிகழ்ச்சியின் மூலம் சினிமாவுக்கு அறிமுகம் ஆகியவர் ராஜு மோகன். இந்த தொடரில் இவருக்கு கிடைத்த வரவேற்பு அடுத்தடுத்து சின்னத்திரையில் இவருக்கு வாய்ப்பு கிடைத்தது. சினிமாவில் வாய்ப்பு தேடிய இவருக்கு, தொடர்ந்து சிறு சிறு கதாபாத்திரத்தில் படங்களில் வாய்ப்பு கிடைத்தது. தொடர்ந்து சினிமாவில் சாதிக்க போராடிய இவருக்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் வாய்ப்பு கிடைத்தது.

பிக் பாஸ் சீசன் 5ல் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மக்களை மகிழ்வித்து இருந்தார். இந்த நிகழ்ச்சியில் டைட்டிலையும் 50 லட்சம் பணத்தையும் வெற்றிபெற்றார். இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் ராஜுவுக்கு ரசிகர்கள் கூட்டம் இருந்தாலும், எதிர்பார்த்த வரவேற்பு சினிமாவில் கிடைக்கவில்லை. நீண்ட இடைவெளிக்கு பிறகு தற்போது பன் பட்டர் ஜாம் படத்தில் நாயகனாக நடித்து வருகிறார்.
இந்நிலையில் பைக் எடுத்துக்கொண்டு செம்ம கெத்தாக லடாக் ரைடு சென்று உள்ளார். பிக் பாஸ் ராஜு இந்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.