குயின்சியிடம் லவ் ட்ராக் ஓட்டும் அசீம்.! பூமர் அங்கிள், Cringe மாமா என கலாய்த்து தள்ளும் நெட்டிசன்கள்

வெளியிட்டது

குயின்சியிடம் கடலை போடும் அசிமை நெட்டிசன்கள் பூமர் அங்கிள் என்று கலாய்த்து பதிவுகளை போட்டு வருகின்றனர். விஜய் டிவியில் இரவு 9:30 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது பிக்பாஸ் என்னும் ரியாலிட்டி ஷோ. இதில் போட்டியாளராக கலந்து கொண்ட அசீம் வந்த நாள் முதலே ஏதாவது ஒரு பிரச்சினையை கிளப்பி வருகிறார். மேலும் இவரது குரல் கணீர் என்று இருப்பதால் இவர் பேசத் தொடங்கினாலே சண்டை போல் உருவாகிவிடுகிறது. மேலும் இவர் வழவழவென்று பேசி பலருக்கும் எரிச்சலையும் ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார். சமீபத்தில் ஆயிஷாவை வாடி போடி என்று ஒருமையில் பேசினார் அசீம். மேலும் விக்ரமனையும் வாடா போடா என்று பேசினார். சண்டை போடும் போது கெத்தாக பேசிவிட்டு பின்னர் அவர்களிடமே சென்று மன்னிப்பு கேட்பதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார் அசீம்.

இந்த பிரச்சனைகள் எல்லாம் ஓய்ந்து அசீமை தற்போது வீட்டில் இருக்கும் 13 பேர் நாமினேஷன் செய்திருக்கிறார்கள். ஆனாலும் அசீம் தான் தனது கோபத்தை குறைத்துக் கொள்வதாக தெரியவில்லை. தற்போது மீண்டும் பல பிரச்சனைகளில் தேவையில்லாமல் மூக்கை நுழைத்துக் கொண்டிருக்கிறார். நேற்று நடந்த நீயும் பொம்மை நானும் பொம்மை டாஸ்க்கில் குழுவை சேர்த்துக்கொண்டு விளையாடிக் கொண்டிருந்தார் அசீம். இதை எதிர்த்து கேள்வி கேட்ட அசிமுக்கும் அமுதவாணனுக்கும் சண்டை வந்தது. மேலும் இன்றைய ப்ரோமோவில் தனலட்சுமியை அவர் அறிவில்லையா என்று திட்டுகிறார். இதற்கு இடையே திடீரென அசீமை பூமர் அங்கிள் என்றும் அங்கிள் போல் இருந்து கொண்டு மனதில் இளைஞராக எண்ணிக் கொண்டிருக்கிறார் என்றெல்லாம் பதிவுகள் போடத் தொடங்கினர் நெட்டிசன்கள். இதற்கு ஒரு பின்னணி காரணமும் உண்டு.

குயின்சியிடம் லவ் ட்ராக் ஓட்டும் அசீம்.! பூமர் அங்கிள், Cringe மாமா என கலாய்த்து தள்ளும் நெட்டிசன்கள் 1

பிக்பாஸ்-ஐ லைவ்வாக பார்த்துக் கொண்டிருந்த பலருக்கும் அசீம் பற்றி போடப்படும் இந்த பதிவுகள் புரிந்திருக்கும். ஏனென்றால் நேற்று இரவு சோபாவில் சாப்பிட்டிக் கொண்டிருந்த குயின்சியிடம் சென்று, உனது பாய் பிரண்டுக்கு நீ ஊட்டி விடு என்றெல்லாம் அவரிடம் கடலை போடும் விதமாக பேசிக் கொண்டிருந்தார். அங்கு வந்த நிவாவிடமும் நீ அசலுக்கு ஊட்டினாய், ஆனால் குயின்சி அவள் பாய் பிரண்டான எனக்கு ஊட்ட மறுக்கிறாள் என்றெல்லாம் பேசினார். அதற்கு நிவா அவளுக்கு விருப்பம் இருந்தால் அவள் அதை செய்வாள் என்று பதிலடி கொடுத்தார். இதை பார்த்த நெட்டிசன்கள் அசீமை பூமர் அங்கிள் என்றும், மனதிற்குள் இளைஞர் என இந்த அங்கிள் நினைத்துக் கொண்டிருக்கிறாரா என்றும் பதிவுகளை போட்டு வறுத்து எடுத்து வருகின்றனர்.

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்