பைத்தியம் முத்தி போச்சு.! அவனை மெண்டல் ஆஸ்பத்திரிக்கு அனுப்புங்க.! அசீமை வச்சி செய்யும் நெட்டிசன்கள்.!

வெளியிட்டது

பிக்பாஸில் போட்டியாளராக கலந்து கொண்டுள்ள அசீம், இன்று ஆயிஷாவிடம் நடந்து கொண்ட விதம் பலரையும் முகம் சுளிக்க வைத்துள்ளது. மேலும் அவர் விக்ரமனை வாடா போடா என்று ஏக வசனத்தில் திட்டிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி இருக்கிறது. பிக்பாஸ் சீசன் சிக்ஸ் நிகழ்ச்சி கடந்த ஒன்பதாம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. 11 நாட்களை கடந்துவிட்ட பிறகு தற்போது சண்டை சச்சரவு என மிக அதிகமாக இருக்கிறது. எப்போதும் போல் இல்லாமல் இந்த முறை 21 போட்டியாளர்களை தேர்வு செய்துள்ளது பிக்பாஸ் டீம். அதேபோல் தொலைக்காட்சியில் ஒரு மணி நேரம் மட்டுமே ஒளிபரப்பு செய்து வந்த நிலையில் ஹாட்ஸ்டார் இல் 24 மணி நேரம் பார்க்கும் விதமாக தற்போது ஒளிபரப்பு செய்து வருகிறது.

பைத்தியம் முத்தி போச்சு.! அவனை மெண்டல் ஆஸ்பத்திரிக்கு அனுப்புங்க.! அசீமை வச்சி செய்யும் நெட்டிசன்கள்.! 1

இந்த 24 மணி நேரம் ஒளிபரப்பு, பலருக்கும் ஆப்பு அடிக்கும் விதமாக உள்ளது, பலரின் உண்மை முகங்களை தெரிந்து கொள்ளும் வகையில் இருக்கிறது. இன்று பிக்பாஸ் டீம் ஒரு போட்டியை வைத்திருந்தது. அதில் தகுதிக்கு ஏற்ப தங்களை வரிசைப்படுத்திக் கொள்ள போட்டியாளர்களை அறிவுறுத்தி இருந்தது பிக்பாஸ். எப்போதுமே இந்த போட்டியில் சண்டை நிகழும் தான். ஆனால் இந்த முறை கொஞ்சம் ஓவராக சென்று விட்டது. குறிப்பாக அசீம் ஆயிஷாவிடம் சென்று நீ இந்த வீட்டில் தூங்குவதை தவிர வேறு என்ன செய்து கொண்டு இருந்தாய் என்று காட்டமாக கேள்வி எழுப்பினார். மேலும் ஒரு படி மேலே போய் கையை நீட்டி பேசாதே என்று அசீம் சொல்லிக் கொண்டிருக்க, நான் அப்படித்தான் பேசுவேன் என்று பதிலுக்கு ஆயிஷா கத்திக் கொண்டிருந்தார். திடீரென ஆயிஷாவை பார்த்து போடி வாடி என்று ஒருமையில் கடுமையாக பேசினார் அசீம்.

மேலும் விக்கிரமனை பார்த்து வெள்ளை சட்டை போட்டால் நீ பெரிய அரசியல்வாதியா என்று அவரையும் பார்த்து வாடா போடா என்று ஒருமையில் திட்டத் தொடங்கினார். ஆனால் இதையெல்லாம் பிக்பாஸ் கண்டு கொள்ளவே இல்லை. மேலும் ஆயிஷாவை பார்த்து சீ போடி மூஞ்சியும் முகரையும் பாரு என்றெல்லாம் ஒருமையில் கடுமையாக பேச தொடங்கினார். ஒரு கட்டத்தில் கோபத்தின் உச்சிக்கு சென்ற ஆயிஷா தன் காலில் கிடந்த ஷூவை கழட்டி அசிமை அடிக்கச் சென்றார். இதை பார்த்துக் கொண்டிருந்த பல ரசிகர்களுக்கும் அசீம் மீது கோபம் வந்தது. மேலும் இதைக் காரணம் காட்டி மற்றவர்கள் அசீமை ஜெயிலுக்கு அனுப்ப வேண்டும் என்று பேசத் தொடங்கினர். இதனால் தொடர்ந்து அசீம் கத்திக் கொண்டே இருந்தார். அவர் ஆயிஷா கையை நீட்டியதால் தான் நான் போடி வாடி என்று பேசினேன் என்று வியக்கானம் பேசத் தொடங்கினார்.

அசீமின் இந்த நடவடிக்கை பலருக்கும் எரிச்சலை ஏற்படுத்தியது. ஏதோ இவர்தான் நியாயவாதி போல் பலரையும் திட்டி தீர்க்கத் தொடங்கினார். இதை பார்த்த நெட்டிசன்கள் பலரும் அசீமுக்கு பைத்தியம் முத்தி விட்டது. அவரை முதலில் வெளிய அனுப்புங்கள் என்று மீம்ஸ்களை போட்டு வறுத்து எடுக்க தொடங்கினர்.

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்