விஜய் டிவியில் ஒளிபரப்பாகி மக்களை மகிழ்வித்து கொண்டிருக்கும் ஒரு நிகழ்ச்சி தான் பிக்பாஸ். தற்போது பிக்பாஸ் ரசிகர்களுக்கு மகிழ்ச்சி தரும் விதத்தில் செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. அதில் ஜூலை இரண்டாவது வாரம் அல்லது ஆகஸ்ட் முதல் வாரத்தில் சீசன் 6 தொடங்க உள்ளதாகவும், அதற்கான போட்டியளார்களை தேர்வு செய்து வருவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது. ஆனால் கமல் தொகுத்து வழங்குவாரா? இல்லை சிறிது காலம் என்றாலும் அல்டிமேட்டை சிறப்பாக தொகுத்து வழங்கிய சிம்புவே சீசன் 6ஐ தொகுத்து வழங்குவாரா என்ற பேச்சுக்களும் எழுந்துள்ளன. கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்

தமிழில் பிக்பாஸ் 5 சீசன்களை கடந்துவிட்டது. ஐந்து சீசன்களையும் கமலே தொகுத்து வழங்கி வந்தார். பின்னர் ஓடிடி தளமான ஹாட் ஸ்டாரில் வெளியாகும் வண்ணம் அல்டிமேட் என்ற நிகழ்ச்சியும் ஒளிபரப்பானது. இந்த நிலையில் கமல் திடீரென்று அல்டிமேட்டிலிருந்து விலகி அதிர்ச்சி கொடுத்தார். பட வேலைகள் இருப்பதால் விலகுகிறேன், மீண்டும் பிக்பாஸ் சீசன் 6ல் சந்திப்போம் என்று விளக்கமும் அளித்தார். இதனால் சில காலம் பிக்பாஸை சிம்பு தொகுத்து வழங்கினார். ரசிகர்கள் பிக்பாஸ் சீசன் 6 எப்போது வரும் என்ற ஆவலில் இருந்தனர். Youtube Video Code Embed Credits: Galatta Tamil
தற்போது வழக்கம் போல் சீசன் 6ல் எதிர்பார்க்கப்படும் போட்டியாளர்கள் பெயர் முன் கூட்டியே எப்படியாவது கசிந்து விடும். அந்த விதத்தில் சில பெயர்கள் அடிபட்டு வருகின்றன. மௌன ராகம் சீரியல் ரவீனா, கிங்ஸ்லி, குக் வித் கோமாளி ஸ்ருதிகா, ஸ்ரீநிதி, வினோத் பாபு, பூனம் பாஜ்வா போன்றவர்கள் பெயர்கள் பட்டியலில் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அந்த வீடியோவை நீங்களும் காண..Watch the Below Video…