பிக்பாஸில் கலந்து கொண்டுள்ள ஷெரினாவை நெட்டிசன்கள் பலரும் கலாய்த்து பதிவிட்டு வருகின்றனர். விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்த இரண்டு நாட்களாக சண்டை சச்சரவு அடிதடி என்று வீடே ரணகளமாக இருக்கிறது. அதற்கு முக்கிய காரணம் பிக்பாஸ் கொடுத்த ஒரு டாஸ்க் தான். நீயும் பொம்மை நானும் பொம்மை என்ற டாஸ்கை பிக்பாஸ் போட்டியாளர்களுக்கு கொடுத்தார். இதில் பொம்மையை தூக்கிக்கொண்டு ஓடிச் சென்று ஒரு வீட்டிற்குள் அந்தந்த இடங்களில் வைக்க வேண்டும். இந்த போட்டி கடந்த ஆண்டு ஒளிபரப்பான போதே மிகவும் சண்டையாக இருந்தது. எனவே இந்த முறையும் இந்த போட்டியை மறக்காமல் வைத்துள்ளது பிக்பாஸ் டீம். இதில் பல அடிதடி சண்டைகள் நடந்து வருகின்றன. குறிப்பாக அசீம் தனலட்சுமி சண்டைகள் இரண்டு நாட்களாக நீடித்து வருகின்றன.
இன்று அதிகபட்சமாக சென்று தனலட்சுமியின் நெஞ்சு பகுதியில் கையை வைத்து அசீம் தள்ளினார். இதனால் அவர் கையில் அடிபட்டு ரத்தக்கட்டு ஏற்பட்டுள்ளது. மேலும் அமுதவாணன், விக்ரமனை வாடா போடா என்றும் பேசி வெளியே போங்கடா என்றும் மிக கீழ்தரமாக நடந்து கொண்டுள்ளார் அசீம். இதனால் அவருக்கு ரெட்கார்டு கொடுத்து அவரை வெளியே அனுப்ப வேண்டும் என்ற குரல்கள் வலுத்து வருகின்றது. இதில் ஷெரினா ஒரு படி மேலே போய் கீழே விழுந்து மண்டையில் அடிபட்டு விட்டதாக பொய்யாக கூறி இருக்கிறார். அந்த வீடியோவை நெட்டிசன்கள் பலரும் எடுத்து ஷெரினாவை மரணமாக கலாய்த்து வருகின்றனர் .இணையத்தில் வைரலான பல வீடியோக்களை எடுத்து இதனுடன் ஒப்பிட்டு அவர்கள் மீம்ஸ்களை போட்டு வருகின்றனர்.
பெங்களூருவை சேர்ந்த மாடல் அழகியான ஷெரீனா பிறப்பால் ஒரு மலையாளி. இவர் ஏற்கனவே ஆயிஷாவுடன் மலையாளத்தில் பேசிக் கொண்டிருந்தபோது பிக் பாஸ் மலையாளத்தில் பேசி இவர்களை கலாய்த்தார். இந்த நிலையில் நீயும் பொம்மை நானும் பொம்மை டாக்கில் தனலட்சுமி தன்னை தள்ளி விட்டதாக ஒரு நாடகத்தை ஆடியிருக்கிறார் ஷெரினா. இதை பார்த்த நெட்டிசன்கள் பலரும் தனலட்சுமி செரீனாவை தள்ளி விடவும் இல்லை, செரீனாவின் மண்டையில் அடிபடவும் இல்லை. செரீனா ஒரு நாடகத்தை நடத்தி வருகிறார் என்று மீம்ஸ்களை போட்டு வருகின்றனர். மேலும் இணையத்தில் ரெண்டான சில வீடியோக்களையும் செரீனாவுடன் ஒப்பிட்டு அவர்கள் பகிர்ந்து வருகின்றனர் அந்த வீடியோக்களில் சில உங்கள் பார்வைக்கு..!
