வருகிறது பிக் பாஸ் சீசன் 6!!”கமலா? இல்லை சிம்புவா?”!! தொகுப்பாளர் அறிவிப்போடு ஒளிபரப்பு செய்தியையும் அறிவிக்கும் விஜய் டிவி!!

வெளியிட்டது

வருகிறது பிக் பாஸ் சீசன் 6!!"கமலா? இல்லை சிம்புவா?"!! தொகுப்பாளர் அறிவிப்போடு ஒளிபரப்பு செய்தியையும் அறிவிக்கும் விஜய் டிவி!! 1

தொழில்நுட்பங்களும், விஞ்ஞானமும் அதிகரித்து வரும் வேளையில் இப்பொது மக்களுக்கு நிறைய விஷயங்களும் செய்திகளும் நொடிக்கி நொடி கொடுக்கப்பட்டுக்கொண்டே இருக்கிறது. எதோ ஒன்றை எப்போதும் தேடும் மனிதமனம், இந்த காலத்திலும், அடுத்த வீட்டில் நடக்கும் விஷயங்களை குறித்து பேசுவதில் மிகவும் ஆர்வமாக இருக்கிறது. அதிலும் குறிப்பாக நேரிலேயே ஒருவர் வீட்டினுள் நடக்கும் விஷயங்களை பார்க்க மனித மனம் எப்போதும் ஆசைப்படும்.

இதன் அடிப்படையில் வெளிநாடுகளில் மிகவும் பிரபலமாக இருந்த “பிக் பாஸ்” நிகழ்ச்சி ஹிந்தியில் ஆரம்பிக்கப்பட்டு மிகவும் வெற்றிகரமாக ஒளிபரப்பானது. தமிழ் சமூகத்தில் இது கொஞ்சம் எதிர்மறையான விமர்சங்களை பெரும் என்பதால் இதனை துவங்க தமிழில் கொஞ்சம் தயங்கினர். சில ஆண்டுகள் மிக பெரிய யோசனைக்கு பின், தமிழில் துவங்கினர். தமிழ் சினிமாவின் மிக முக்கிய நடிகர் கமல் இதனை தொகுத்து வழங்க ஒப்பந்தமானார். இதுவே மிக பெரிய எதிர்பார்ப்பை இந்த நிகழ்ச்சியின் மேல் ரசிகர்களுக்கு உருவானது. எப்போதும் சினிமாவில் முற்போக்கான சிந்தனைகளை கொண்டு வந்தவர் நடிகர் கமல். அதேபோல் சின்னத்திரையிலும் ஒரு மிக முக்கிய முன்னேற்றத்திற்கு விஜய் டிவி நிறுவனம் முயன்றது.

முதல் சீசனே மிக பெரிய வெற்றியையும், சர்ச்சைகளையும் இது ஏற்படுத்தியது. 100 நாட்கள் ஒரே வீட்டில் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையில் பங்கேற்பவர்களை கொண்டு தினம் ஒரு விளையாட்டு நிகழ்வு, போட்டிகள், வாராவாரம் ஒரு வெளியேற்றம் என அனைத்து பிரச்சனைகளிலும் சந்தித்து மக்களின் ஆதரவில் மக்களே நேரடியாக வாக்களித்து தொடருபவர்களே போட்டியின் வெற்றியாளராக தேர்ந்துடுக்கப்படுவார்கள்.

இதன் அடிப்படையில் முதல் சீசனில் ஆரவும், இரண்டாவது சீசனில் நடிகை ரித்விகா, மூன்றாவது சீசனில் பாடகர் முகின் ராவ், நான்காவது சீசனில் நடிகர் ஆரி என மக்களின் மனம் கவர்ந்த போட்டியாளர்களே வெற்றியாளர்களாக இருந்திருக்கிறார்கள். இதில் இன்னும் குறிப்பாக வெற்றியாளர்களை விட சில போட்டியாளர்களும் மற்ற போட்டியாளராகளுடன் அவர்களுக்கு ஏற்பட்ட சண்டைகள் ரசிகர்களை மிகவும் கவர்ந்தவை.

4 வெற்றிகரமான சீசன் முடிந்து 5வது சீசன் நடைபெற்றது. மிகவும் பிரமாண்டமாக நடைபெற்ற இந்த சீசனை நடிகர் கமல்ஹாசனே தொகுத்து வழங்கினார். கொரோனா காலகட்டத்தில் இந்த நிகழ்ச்சி மிகவும் கவர்ந்தது. சில மறைக்கப்பட்ட தொகுப்புகளும் வெளியாகி மிகவும் வரவேற்பை பெற்றன. இதில் நடிகர் ராஜு வெற்றிபெற்று பரிசு தொகையாக 5000000 ரூபாயை வீட்டிற்கு எடுத்து சென்றுள்ளார்.

கொரோனா காலகட்டம் நீடிக்கப்பட்ட நிலையில், தனது விக்ரம் படம் துவங்கிய காரணத்தால் கமல் பாதியிலேயே இந்த நிகழ்ச்சியில் இருந்து விலக ஏற்பட்டது. “Bigg Boss Ultimate” என்ற பெயரில் 24 மணிநேரமும், 100 நாட்களும் Disney+Hotstar’இல் ஒளிபரப்பான இந்த நிகழ்ச்சியின் மிக பெரிய அளவில் ரசிகர்களால் ரசிக்கபட்டது. கமல்ஹாசன் விலகவே இளம் நாயகர் சிம்பு தொகுப்பாளராக களமிறங்கினார். இது ரசிகர்களின் பாராட்டை இன்னும் கொஞ்சம் பெற்றது. சென்ற சீசனில் மிகவும் ரசிகர்களால் வரவேற்கப்பட்டு போட்டியாளர்கள் சிலர் களமிறக்கப்பட்டனர்.

இதில் பாலா வெற்றிபெற்றார். அன்று முதலே இந்த நிகழ்ச்சியின் அடுத்த சீசன் எப்போது ஒளிபரப்பாகும் என்ற கேள்வி ரசிகர்களிடம் பெரிதாக இருந்தது. இதற்கு தொகுப்பாளராக நடிகர் கமல்ஹாசன் மீண்டும் வருவாரா? இல்லை நடிகர் சிம்புவே? தொடர போகிறாரா? என்ற கேள்விகளும் எழுப்பப்பட்டு வந்தன. இப்பொது வெளியான அண்மைய செய்திகளில் பார்க்கும் போது, கமலே இந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளராக மீதும் தொடர போகிறார் என செய்திகள் வெளியாகி வருகின்றன. அதே போல இந்த சீசன் வருகிற ஆகஸ்ட் 2ஆம் தேதி முதல் ஒளிபரப்பாகும் எனவும் கூறப்படுகிறது.

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்