பிக்பாஸ் சீசன் 6 க்கு போகிறார்களா? தாமரையின் கணவரும் அஸ்வினும்?? தீயாய் பரவும் தகவல்

வெளியிட்டது

பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி அக்டோபர் இரண்டாம் தேதி மிகப் பிரமாண்டமாக துவங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. பிக்பாஸ் தமிழில் 5 சீசர்களை வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளது. இந்த ஐந்து சீசன்களையும் கமலஹாசனே தொகுத்து வழங்கினார். தற்போது ஆறாவது சீசன் எப்போது வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டுள்ள நிலையில், போட்டியாளர்களின் தேர்வு தீவிரமாக நடைபெற்று வருகிறது. பிக்பாஸ் சீசன் 3 வரை மட்டுமே நன்றாக ஓடியது. சீசன் 3க்கு பிறகு, கொரோனா பரவல் இருந்த காரணத்தினால் சீசன் 4 மற்றும் சீசன் 5 சரியாக ஓடவில்லை. மேலும் பிக் பாஸ் அல்டிமேட் என்ற 24 மணி நேரமும் ஒளிபரப்பான நிகழ்ச்சியும் ஒடிடியில் வெளியானதால், அதற்கும் மிகப்பெரிய வரவேற்பு இல்லை. எனவே இந்ம சீசனை சர்ச்சைகள் நிறைந்த போட்டியாளர்களை வைத்து விறுவிறுப்பாக எடுப்பதற்காக பிக்பாஸ் குழு திட்டமிட்டுள்ளது. இதற்காக போட்டியாளர்களை தேர்வு செய்யும் பணி விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

பிக்பாஸ் சீசன் 6 க்கு போகிறார்களா? தாமரையின் கணவரும் அஸ்வினும்?? தீயாய் பரவும் தகவல் 1

சீசன் 1, 2, 3 ஆகியவை சற்று வித்தியாசமானது. ஏனெனில் பிக்பாஸ் என்றால் என்னவென்றே தெரியாமல் இருந்தபோது ஆரம்பமானது இந்த நிகழ்ச்சி. மேலும் இதில் பங்கேற்கும் போட்டியாளர்கள் குறித்த மக்களிடையே கணிப்பு எதுவுமே இல்லாத வண்ணம், ஒரு துளி விஷயம் கூட கசியாமல் பிக்பாஸ் குழு பார்த்துக் கொண்டது. ஆனால் சீசன் 4 மற்றும் ஐந்தில் யார் பங்கேற்பார்கள் என்பது குறித்த யூகங்கள் வெளியாகின. அந்த யூகங்கள் படியே போட்டியாளர்களும் கலந்து கொண்டனர். தற்போது அதேபோல்தான் சீசன் 6ல் யாரெல்லாம் கலந்து கொள்வார்கள் என்று யூகப்பட்டியல் ஒவ்வொன்றாக வெளியாகி வருகிறது. அதன்படி குக்கு வித் கோமாளி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்த ரக்ஷன் முதல் பெயர் முதலில் அடிபடுகிறது. அடுத்தபடியாக சூப்பர் சிங்கர் பாடகி ராஜலட்சுமி, பாலிமர் செய்தி வாசிப்பாளர் ரஞ்சித் ஆகியோர் பங்கு பெற உள்ளதாக தகவல்கள் வெளியான வண்ணம் இருக்கிறது. இந்த நிலையில் மேலும் சில போட்டியாளர்களின் பெயர்கள் தற்போது யூகங்களாக வெளிவந்து கொண்டிருக்கிறது.

 

அதில் முதல் பெயராக, சிம்புவை காதலிப்பதாக கூறி தொடர்ந்து சர்சையை ஏற்படுத்தி வரும் சின்னத்திரை நடிகை ஸ்ரீ நிதியும், பல வருடங்களாக விஜய் டிவியில் நிகழ்ச்சிகளை தொகுத்து வரும் டிடியும் கலந்து கொள்ள இருப்பதாக தெரிகிறது. மேலும் குக்கு வித் கோமாளி நிகழ்ச்சி மூலமாக புகழ் பெற்ற அஸ்வினுக்கு தற்போது சரியான பட வாய்ப்புகள் ஏதுமில்லை. எனவே அவரும் பிக்பாஸில் கலந்து கொள்ள இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது. அவருடன் சேர்த்து சீசன் 5 மற்றும் அல்டிமேட்டில் ஒரு கலக்கு கலக்கிய தாமரையின் கணவரும் பங்கு பெறக்கூடும் என்ற தகவலும் தற்போது வெளியாகி உள்ளது. கொரோனா காலம் என்பதால் போட்டியாளர்களை இரண்டு வாரங்களுக்கு தனிமை படுத்த வேண்டும். அக்டோபர் 2ம் தேதி பிக்பாஸ் துவங்கப்படும் நிலையில் போட்டியாளர்கள் தேர்வு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. போட்டியாளர்கள் தேர்வு முடிந்து அவர்கள் அடுத்த மாதம் (செப்டம்பர்) இரண்டாவது வாரத்தில் தனிமைப்படுத்தப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்