விரைவில் தொடங்கும் பிக்பாஸ் சீசன் 7.! முதல் ப்ரோமோவை வெளியிட்ட விஜய் டிவி.!

வெளியிட்டது

பிக் பாஸ் ரசிகர்களுக்கு தற்போது ஒரு மகிழ்ச்சியான செய்தி கிடைத்திருக்கிறது. முதல் ப்ரோமோவை தற்போது பிக் பாஸ் டீம் வெளியிட்டு இருக்கிறது. அதில் கமலஹாசன் i am watching என்று சைகை செய்வது போல அந்த ப்ரோமோ தற்போது வெளியாகி இருக்கிறது. மேலை நாடுகளில் ஒளிபரப்பான பிக் பிரதர் என்கிற நிகழ்ச்சியை அடிப்படையாகக் கொண்டு கடந்த 2017 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது தான் பிக் பாஸ் நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சி தமிழில் மொத்தம் ஆறு சீசன்களை முடித்து இருக்கிறது. ஏழாவது சீசன் விரைவில் தொடங்கப்பட இருப்பதாக தகவல் வெளியான நிலையில் இன்று முதல் ப்ரோமோவை வெளியிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்திருக்கிறது விஜய் டிவி. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

விரைவில் தொடங்கும் பிக்பாஸ் சீசன் 7.! முதல் ப்ரோமோவை வெளியிட்ட விஜய் டிவி.! 1

முதல் சீசனில் ஆரவ்வும், இரண்டாவது சீசனில் ரித்திகாவும், மூன்றாவது சீசனில் முகேனும், நான்காவது சீசனில் ஆரியும், ஐந்தாவது சீசனில் ராஜு ஜெயமோகனும், ஆறாவது சீசனில் அசீமும் வெற்றியாளர்களாக வந்தனர். பல சர்ச்சைகளுக்கு நடுவே ஆறாவது சீசன் நடந்து முடிந்திருந்தது. இந்த சீசனின் வெற்றியாளராக இருந்த அசீம் சக போட்டியாளர்களை மிகவும் மோசமாக நடத்திய போதிலும் அவருக்கு டைட்டில் கொடுக்கப்பட்டது. இது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இந்த நிலையில் ஏழாவது சீசன் எப்பொழுது தொடங்கப்படும் என்று ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்து காத்திருந்தனர். இந்த சீசனையும் கமலஹாசனையே தொகுத்து வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்த நிலையில் தற்போது புதிய ப்ரோமோ ஒன்று வெளியாகியிருக்கிறது. அதில் கடற்கரையில் கமலஹாசன் கோர்ட் சூட்டுடன் நின்று கொண்டிருக்கிறார். அப்போது திரும்பி பார்க்கும் அவர் நான் உங்களை பார்த்துக் கொண்டிருக்கிறேன், ஓடவும் முடியாது, ஒளியவும் முடியாது என்பது போன்ற சைகை காட்டுகிறார். அப்போது பிக்பாஸ் செவன் என்கிற லோகோவுடன் ‘விரைவில்’ என்கிற ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. நீங்களும் தற்போது வெளியாகியிருக்கும் அந்த ப்ரோமோவைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!

 

YouTube Video Embed Code Credits: Vijay Television

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்