தனது பிரிட்ஜை அழகாக சுற்றி காட்டிய தாமரை செல்வி.! பங்கமாக கலாய்த்த மகன்..!

வெளியிட்டது

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 5ல் போட்டியாளராக கலந்து கொண்டவர்தான் தாமரைச்செல்வி. இவர் ஆரம்பத்தில் குடும்ப கஷ்டம் காரணமாக சிறு வயதிலேயே தெருக்கூத்து நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள தொடங்கினார். தனது தம்பி தங்கைகளை படிக்க வைப்பதற்காக இவர் சிறுவயதிலேயே தனது படிப்பை பாதியிலேயே விட்டு விட்டு மேடை நாடகங்களில் நடித்த தொடங்கினார். கோவில்கள் மற்றும் திருவிழாக்களில் போடப்படும் மேடை நாடகங்களில் இவர் நடித்து வந்தார். பின்னர் இவருக்கு பிக்பாஸில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. சீசன் 5ல் ஒரு முக்கியமான போட்டியாளராக கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சிக்கு பின்னர் இவர் பிரபலமாக அறியப்பட்டார். இந்த நிகழ்ச்சியில் இவர் வெற்றி பெறுவார் என்று நினைத்து இருந்த நிலையில், எதிர்பாராத விதமாக குறைந்த வாக்குகள் பற்றி வீட்டை விட்டு வெளியேறினார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

தனது பிரிட்ஜை அழகாக சுற்றி காட்டிய தாமரை செல்வி.! பங்கமாக கலாய்த்த மகன்..! 1

பின்னர் மீண்டும் ஓடிடி தளத்தில் வெளியான பிக்பாஸ் அல்டிமேட் என்ற 24 மணி நேரமும் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இங்கும் இவரால் வெற்றி பெற முடியவில்லை. ஆனாலும் மனம் தளராமல் பிக்பாஸ் ஜோடிகள் என்ற நடன நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு தனது கணவருடன் சேர்ந்து நடனம் ஆடி வந்தார். நடனம் என்றால் என்னவென்றே தெரியாத தனது கணவருக்கும் பயிற்சி கொடுத்து நடனமாடி பாராட்டுகளை பெற்று வந்தார் தாமரைச்செல்வி. இங்கும் இவரால் வெற்றி பெற முடியவில்லை என்ற போதும், மனம் தளராமல் அடுத்தடுத்த நிகழ்ச்சிகளில் பங்கெடுத்து வருகிறார். மேலும் லோட்டஸ் ஃபேமிலி என்ற youtube சேனல் ஒன்றை தொடங்கி அதில் வீடியோக்களை பதிவேற்றி வருகிறார்.

சமீபத்தில் தனது யூடியூப் சேனலில், வீட்டை சுற்றி காட்டி ஹோம் டோர் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். மேலும் மீன் குழம்பு வைக்கும் வீடியோ ஒன்றையும் வெளியிட்டிருந்தார் .இந்த இரண்டு வீடியோக்களும் பார்வையாளர்களை அள்ளியது. தற்போது தனது பிரிட்ஜ் டூர் ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். இந்த பிரிட்ஜ் பிக்பாஸ் சீசன் போட்டியாளர் வருணால் தாமரைக்கு பரிசாக வழங்கப்பட்டது. தனது மகனுடன் சேர்ந்து பிரிட்ஜில் என்னென்ன பொருட்கள் இருக்கிறது என்பதை அழகாக காமெடியாக விளக்கியுள்ளார். அந்த அழகான வீடியோவை நீங்களும் காண.. Watch the below video..

YouTube Video Code Embed Credits: Lotus Family

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்