தவறான செயல் செய்த ஏடிகே.! வெளியே அனுப்பிவிடுவேன் என கடுமையாக எச்சரித்த பிக்பாஸ்.!

வெளியிட்டது

பிக்பாஸ் வீட்டில் தொடர்ந்து விதிகளை மீறி வருவதால் ஒரு போட்டியாளரை வெளியேற்றி விடுவோம் என்று பிக்பாஸ் அந்த போட்டியாளரை அழைத்து மிரட்டி இருக்கும் காணொளி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. பிக்பாஸ் சீசன் 6 தொடங்கி 85 நாட்களை கடந்து விட்டது. இந்த நிகழ்ச்சியில் 21 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். தற்போது வெறும் எட்டு போட்டியாளர்கள் மட்டுமே விளையாடி வருகின்றனர். இந்த வாரம் அசீமை தவிர அனைவரும் நாமினேஷனில் இருக்கிறார்கள். விக்ரமன், அமுதவாணன், ஏடிகே, கதிரவன், ரட்சிதா, மைனா, ஷிவின் என ஏழு பேர் இந்த வாரம் நாமினேஷனில் இருக்கிறார்கள். கடந்த வாரம் மணிகண்டன் வெளியேறினார். அதற்கு முந்தைய வாரம் தனலட்சுமி என தொடர்ந்து விளையாட்டில் ஆர்வமாகவும் சிறப்பாகவும் விளையாடி வந்த போட்டியாளர்கள் ஒவ்வொருவராக வெளியேறி வருகின்றனர். இந்த நிலையில் இந்த வாரம் யார் வெளியேறுவார்கள் என்று எதிர்பார்ப்பு மக்களிடையே அதிகரித்துள்ளது.

தவறான செயல் செய்த ஏடிகே.! வெளியே அனுப்பிவிடுவேன் என கடுமையாக எச்சரித்த பிக்பாஸ்.! 1
இதில் இந்த வாரம் நாமினேட் ஆகி இருக்கும் ஏடிகேவிற்கு சில நாட்களாக உடல்நிலை சரியில்லை. கடந்த வாரம் கமலஹாசனின் வீக் என்ட் எபிசோடில் அமர்ந்திருந்த அவர் திடீரென வயிற்றைப் பிடித்துக் கொண்டு கீழே விழுந்து துடித்து துடித்து கதறினார். பின்னர் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று அவர்கள் கிட்னியில் கல் இருப்பதாக கூறினர். இதனால் அவர் உடல் எடையும் வெகுவாக குறைந்து எலும்பும் தோலுமாக காணப்படுகிறார். இன்று நடந்த டிக்கெட் டூ பினாலே டாஸ்க் கூட அவரால் சரியாக விளையாட முடியவில்லை. ஆனால் அவர் அடிக்கடி சிகரெட் புகைக்கும் இடத்திற்குச் சென்று சிகரெட்டை புகைத்து தள்ளுகிறார். இதை கவனித்த பிக்பாஸ் இன்று ஏடிகேவை கன்பசன் அறைக்கு கூப்பிட்டு கண்டித்திருக்கிறார். இந்த நிலைமை தொடர்ந்தால் உங்களை வெளியேற்றுவதை தவிர வேறு வழி எங்களுக்கு தெரியவில்லை என்றும் அவர் ஏடிகேயிடம் கடுமையாக பேசியிருக்கிறார்.


ஏடிகேவை அறைக்கு அழைத்த பிக்பாஸ் உங்களை எதற்காக அழைத்தேன் என்று உங்களுக்கே தெரியும், மருத்துவர்கள் உங்களை மிகவும் கண்டித்துடன் புகைபிடிக்க கூடாது என்ற அறிவுறுத்தியும் நீங்கள் தொடர்ந்து புகைப் பிடித்துக் கொண்டிருக்கிறீர்கள், உங்கள் உடல்நிலை தொடர்ந்து மோசம் அடைந்தால் உங்களை இந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றுவதை தவிர வேறு வழியில்லை என்று பிக்பாஸ் காட்டமாக பேசினார். அதற்கு பதில் அளித்த ஏடிகே இங்கு மிகவும் பிரஷராக உணர்வுவதாக கூற, அதற்கு பதில் சொன்ன பிக் பாஸ் எனக்கு தெரியும் ஆனால் என்ன பிரசராக இருந்தாலும் மீண்டும் அந்த புகைப்பிடிக்கும் இடத்திற்கு மட்டும் போகாதீர்கள் என்று ஏடிகேவிற்கு அறிவுரை வழங்கினார். அதற்கு பதில் சொன்ன ஏடிகே,நான் இனிமேல் விதிகளை மதித்து வீட்டிலேயே இருப்பேன் என்று கூறிவிட்டு சென்றார். இந்த வீடியோ இணையத்தில் பரவ தொடங்கியது முதல் ஏடிகே வெளியேறுகிறாரா என்று ரசிகர்கள் கேள்வி எழுப்ப தொடங்கினர்.

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்