Categories: சினிமா

பிகிலுக்கு பொருளாதார ரீதியாக இழப்பு!

இளைய தளபதி விஜய் நடிப்பில் வெளியான படம் பிகில். திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் படம் என சொல்லப்பட்டாலும், பொருளாதார ரீதியாக படம் நஷ்டம் அடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

பிகிலுக்கு பொருளாதார ரீதியாக இழப்பு! 1
பிகில் திரைப்பட போஸ்டர்

இயக்குனர் அட்லீ இயக்கத்தில் இளைய தளபதியின் மூன்றாவது படம் இது. இதற்கு முன்னர் மெர்சல், தெறி ஆகிய படங்கள் இந்த கூட்டணியில் உருவாக்கி இருந்தது. ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது இந்த கூட்டணி.

தற்போதுஇக்கூட்டணியில் வெளியாகி திரையிடப்பட்டிற்கும் பிகில், பொருளாதாரா ரீதியாக இழப்பை சந்தித்ததாக தயாரிப்பாளர் கே.ராஜன் கூறியுள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், சென்னை-செங்கல்பட்டில் ரூ. 33 கோடிக்கு வாங்கிய காளியப்பனுக்கு ரூ. 1 1/2 கோடி நஷ்டம், திருச்சியில் வாங்கிய ரவிக்கு ரூ. 1 கோடி நஷ்டம் தான். இவர்கள் இருவரும் என்னிடம் கணக்கு கூறினார்கள்.

என்னை பொறுத்தவரை கைதி தான் லாபம், பிகில் எல்லோருக்கும் நஷ்டம் என கூறியுள்ளார்.

விடுதலை தமிழ்முரசு

Senior Editor - TamilGlitz சமூக அரசியல் பொருளாதாரம் குறித்தான ஆர்வம் அதிகம். மின்னம்பலத்தில் தொடங்கிய பயணம் ஐபேக் வழியாக இங்கு! As a Tamil news enthusiast with a knack for uncovering the hidden political drama behind the glitzy entertainment scene, I'm your source for the juiciest stories and insightful analysis. #விடுதலை

புதிய செய்திகள்