Categories: சினிமா

ஒரு மணி நேரத்திலேயே விற்றுத்தீர்ந்த பிகில் டிக்கெட்!!

வெளியிட்டது
ஒரு மணி நேரத்திலேயே விற்றுத்தீர்ந்த பிகில் டிக்கெட்!! 1

விஜய் நடிப்பில் வெளியாக இருக்கும் படம் பிகில். இப்படத்தில் விஜய் 3 விதமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார் விஜய். திரையில், விஜய்யைக் காண கோடிக்கணக்கான ரசிகர்கள் பேரார்வமாக காத்துக் கொண்டிருக்கின்றனர். நயன்தாரா, விஜய்க்கு ஜோடியாக நடித்துள்ளார்.இந்த நிலையில், வரும் 25 ஆம் தேதி வெளியாக உள்ள பிகில் படத்திற்கு திரையரங்குகளில் டிக்கெட் முன்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

பல திரையரங்களில் இன்னும் முன்பதிவு தொடங்கப்படவில்லை. கோயம்புத்தூர், ஈரோடு, பொள்ளாச்சி, திருப்பூர் ஆகிய பகுதிகளில் எந்தெந்த திரையரங்குகளில் பிகில் வெளியாகிறது என்ற பட்டியல் வெளியாகியுள்ளது.

பிரான்ஸ் நகரில் உள்ள சிஜிஆர் எபினே திரையரங்கில் பிகில் பிரீமியர் ஷோக்கான டிக்கெட் விற்பனை தொடங்கிய ஒரு மணி நேரத்தில் அனைத்து டிக்கெட்டுகளும் விற்றுத் தீர்த்துவிட்டது. உலகம் முழுவதும் உள்ள ரசிகர்கள் பிகில் படத்திற்காக ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கின்றனர் என்பது இதன் மூலம் தெரிகிறது.

Vinoth Kumar

தன்னம்பிக்கை தான் வெற்றிக்கு முக்கியமாகும் 😎😎😎 பேனா 🖊️ மை உலகை மாற்றும் As a digital journalist born and raised in Tamil Nadu, I'm on a mission to leverage the digital age to bring you the most relevant and personalized news coverage, all while staying true to our Tamil roots.

வெளியிட்டது

புதிய செய்திகள்