Categories: சினிமா

குவிந்த வாழ்த்துகள்! நெஞ்சார்ந்த நன்றி தெரிவித்த ரஜினி!!

வெளியிட்டது
குவிந்த வாழ்த்துகள்! நெஞ்சார்ந்த நன்றி தெரிவித்த ரஜினி!! 1

தனக்குப் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் தனது ட்விட்டர் பக்கத்தில் நெகிழ்ச்சியுடன் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துள்ளார் ரஜினி.

நடிகர் ரஜினிகாந்த் நேற்று (டிச.12) தனது 70-வது பிறந்த நாளைக் கொண்டாடினார். வழக்கம் போலவே இந்த ஆண்டும் அவர் சென்னையில் இல்லை. அவருக்குத் தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள், இந்தியத் திரையுலகினர், இந்தியக் கிரிக்கெட் அணி வீரர்கள் எனப் பலரும் தங்களுடைய சமூக வலைதளப் பக்கங்களில் வாழ்த்துகளைத் தெரிவித்திருந்தார்கள்.

அதுமட்டுமல்லாது , ரசிகர்களும் பல்வேறு நலத்திட்ட உதவிகள் பொதுமக்களுக்கு வழங்கினார்கள். ட்விட்டர் பக்கத்தில் பலரும் வாழ்த்துகளைப் பகிரவே #HappyBirthdaySuperStar #HappyBirthdayRajinikanth ஆகிய ஹாஷ்டேகுகள் இந்திய அளவில் ட்ரெண்டாகி வந்தது.தனது பிறந்த நாளுக்கு வாழ்த்து கூறிய அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார் ரஜினிகாந்த்.

இது தொடர்பாக தனது ட்விட்டர் பதிவில் ரஜினி வெளியிட்டுள்ள கடிதத்தில், “என் பிறந்த நாளை விமரிசையாகக் கொண்டாடி என்னை வாழ்த்திய என்னை வாழ வைக்கும் தெய்வங்களான ரசிகப் பெருமக்களுக்கு, என்னை நெஞ்சார வாழ்த்திய தமிழ் மக்களுக்கும், திரையுலக நண்பர்களுக்கும், அரசியல் பிரமுகர்களுக்கும் மற்றும் பல துறையிலிருக்கும் அன்பர்களுக்கும், பத்திரிகை, ஊடக மற்றும் தொலைக்காட்சியினருக்கும் என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று தனது பதிவில் குறிப்பிட்டார்.

இன்னும் சில நாட்களில் ஹைதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் சிவா இயக்கத்தில் உருவாகும் படத்தின் படப்பிடிப்பில் ரஜினி பங்கேற்கிறார்.

Vinoth Kumar

தன்னம்பிக்கை தான் வெற்றிக்கு முக்கியமாகும் 😎😎😎 பேனா 🖊️ மை உலகை மாற்றும் As a digital journalist born and raised in Tamil Nadu, I'm on a mission to leverage the digital age to bring you the most relevant and personalized news coverage, all while staying true to our Tamil roots.

வெளியிட்டது

புதிய செய்திகள்