Categories: சினிமா

மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடிக்கும் புது படத்தை தொடங்கி வைத்த சீயான் விக்ரம்.!

வெளியிட்டது

மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடிக்க இருக்கும் புது படத்தின் படப்பிடிப்பை நடிகர் விக்ரம் துவங்கி வைத்துள்ளார். படத்தின் முதல்நாள் படப்பிடிப்பு பூஜை புகைப்படங்கள் வெளியாகி இருக்கிறது.

மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடிக்கும் புது படத்தை தொடங்கி வைத்த சீயான் விக்ரம்.! 1

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் விக்ரம், தற்போதும் சில படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். அவரது மகன் துருவ் விக்ரமும் நடிகராக அறிமுகமாகி இருக்கிறார்.

2019ம் ஆண்டு வெளியான ‘ஆதித்யா வர்மா’ என்கிற படத்தின் மூலமாக அறிமுகமான அவர், பின்னர் 2020ம் ஆண்டு ‘வர்மா’ என்கிற படத்திலும், 2022ம் ஆண்டு தனது தந்தையுடன் இணைந்து ‘மகான்’ படத்திலும் நடித்திருந்தார்.

பின்னர் அவருக்கு பெரிய அளவில் படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை. இந்த நிலையில் மாரி செல்வராஜ் இயக்கத்தில், அவர் தற்போது புதிய படம் ஒன்றில் நடிக்க கமிட் ஆகியிருக்கிறார். இந்த படத்திற்கு ‘பைசன்’ என பெயர் வைக்கப்பட்டுள்ளது.

இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இன்று காலை படக் குழுவினர் வெளியிட்டு இருந்தனர். இந்த படத்தில் துருவ் விக்ரமுடன் இணைந்து ரஜிஷா விஜயன், அனுபமா பரமேஸ்வரன், அன்பு போன்றோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கின்றனர்.

இன்று நடைபெற்ற படத்தின் படப்பிடிப்பு பூஜையில் நடிகர் விக்ரம், பா.ரஞ்சித் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். விக்ரம் முதல் கிளாப் அடித்து படத்தின் பூஜையை தொடங்கி வைத்துள்ளார். பலரும் துருவ் விக்ரமின் புதிய படம் வெற்றி பெற வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்