Categories: அரசியல்

75 லட்ச மக்களின் சுதந்திரம் மறுக்கப்பட்டுள்ளது- கொதிக்கும் சிதம்பரம்

தன்னை சிறையில் அடைப்பதால் மன அழுத்தத்திற்கோ அல்லது பாஜவிலோ இணைத்திட போவதில்லை என பாஜகவின் பழிவாங்கும் அரசியல் குறித்து முன்னாள் மத்திய அமைச்சர் பா.சிதம்பரம் கருத்து தெரிவித்துள்ளார்.

75 லட்ச மக்களின் சுதந்திரம் மறுக்கப்பட்டுள்ளது- கொதிக்கும் சிதம்பரம் 1

பண மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு கடந்த 106 நாட்களுக்கு சிறையில் அடைக்கப்பட்டிருந்த காங்கிரசின் மூத்த தலைவரான பா.சிதம்பரம், வியாழன் கிழமை ஜாமீனில் வெளியே வந்தார். அதன் முதல் தொடர்ச்சியாக செய்தியாளர்களை சந்தித்து வரும் அவர், பாஜகவின் பொருளாதார மோசடிகளை குறித்து கருத்து தெரிவித்து வருகிறார்.

நேற்று செய்தியாளர்களை சந்தித்த அவர், “நாம் இங்கு பேசிக் கொண்டு இருக்கிறோம், ஆனால் காஷ்மீரில் 75 லட்ச மக்கள் பேச்சுரிமை மறுக்கப்பட்டுள்ளது. ஒருவருக்கு பேச்சுரிமை மறுக்கப்படுவதே, அனைவருக்கும் மறுக்கப்படுவதற்கு சமமாகும்” என மத்திய அரசை விமர்சனம் செய்தார்.

தொடர்ந்து பேசிய அவர், “சுதந்திரத்தை இது எனக்கானது, இது உனக்கானது என தனி மனிதரிடம் இருந்து பிரிக்க முடியாது. நான் உங்களுடைய சுதந்திரத்தை பாதுகாக்கவில்லை என்றால், என்னுடைய சுதந்திரத்தை உங்களால் பாதுகாக்க முடியாது. தற்போது இந்தியாவில் வலதுசாரி அமைப்புடைய, நம்முடைய சுதந்திரத்தை மறுக்கும் ஒரு பாசிச தனமான ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. நாம் எல்லாம் விழிப்பாக இருக்க வேண்டும்.

வெங்காயம் விலை கிலோ ஒன்றிக்கு 200 ரூபாய் வரை விற்பனை ஆக்குகிறது. ஆனால் மஹாராஷ்டிராவில் கிலோ ரூபாய் 7க்கு எடுத்துக் கொள்ளப்படுவதாக விவசாயிகள் போராடி வருகிறார்கள். இதை பற்றி தான் விவாதிக்க வேண்டும். ஆனால் செய்தித்தாளில் இதை பற்றி எழுத்தாகூடாது, தொலைக்காட்சிகளில் விவாதிக்க கூடாது என அரசியல் பழிவாங்கல் மட்டுமே இந்த அரசின் குறிக்கோளுடன் இருக்கிறது” என குற்றசாட்டியுள்ளார்.

விடுதலை தமிழ்முரசு

Senior Editor - TamilGlitz சமூக அரசியல் பொருளாதாரம் குறித்தான ஆர்வம் அதிகம். மின்னம்பலத்தில் தொடங்கிய பயணம் ஐபேக் வழியாக இங்கு! As a Tamil news enthusiast with a knack for uncovering the hidden political drama behind the glitzy entertainment scene, I'm your source for the juiciest stories and insightful analysis. #விடுதலை

புதிய செய்திகள்